ஆரோக்கியம்புதியவை
கொய்யாப்பழத்துடன் இந்த பொருட்கள் எல்லாம் சேர்த்து சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. இது எளிதில் கிடைக்கக் கூடியதும் ஆகும். விலை மலிவானதும் கூட.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
எண்ணற்ற பயன்கள் நிறைந்த இந்த கொய்யாப்பழத்தினை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதனால் இன்னும் பல நன்மைகள் வாரி வழங்குகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- நன்றாக பழுதுள்ள கொய்யாப்பழத்துடன் மிளகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலின் சோர்வு, பித்தம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
- கொய்யாப்பழத்துடன் சப்போட்டா மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெற்று இரத்தம் சுத்தமாகும்.
- மத்திய நேர உறவுக்கு பின்னர் கொய்யாப்பழம் சாப்பிட்டால், உணவு ஜீரணமாகி மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. வயிற்றுப்புண் பிரச்சனையை சரி செய்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், வயிற்றுப்போக்கு பிரச்சனை, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
- கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து தலையில் பற்று போல போட்டு வந்தால் கடுமையான தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி சரியாகும்.
- கொய்யா இலைகளை அரைத்து நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்று வலி, தொடைப்புண் போன்ற பிரச்சனை சரியாகும்.
- கொய்யாப்பழத்தில் அமில தன்மையும் உள்ளதால், அதனை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.