அழகு..அழகு..புதியவை

ஒரே வாரம் மட்டும் இதை செய்யுங்க, சருமம் எப்படி ஜொலிக்குதுன்னு பாருங்க!

அழகான ஒளிரும் சருமம் என்பது ஆரோக்கியத்தின் மறுபதிவு என்று சொல்லும் அளவுக்கு சருமம் முக்கியத்துவம் வாய்ந்தது. சரியான உணவு பழக்கம், சீரான வாழ்க்கை முறை போன்றவற்றால் எளிதாக ஒளிரும் சருமத்தை விரைவாக பெற முடியும். உங்கள் சருமம் மந்தமாக சோர்வாக இருக்கும் போது நீங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபாடாக உணர்வீர்கள்.

சருமத்தை ஜொலிப்பாக என்ன செய்வது என்னும் முயற்சியை தேடுவீர்கள். அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. மிஅக் விரைவாகவே உங்கள் முகத்தில் பிரகாசம் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். தொடர்ந்து ஒரு வாரம் இதை கடைபிடித்தால் சருமத்தில் உண்டாகும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

​இரவு சுத்தம்

நீங்கள் உங்கள் முகத்துக்கு அதிகப்படியாக மேக் அப் செய்தாலும் சரி, செய்யாமல் இருந்தாலும் சரி தினமும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பு முகத்தை சுத்தப்படுத்துவதை பழக்கப்படுத்துங்கள். நள்ளிரவு ஆனாலும் இதை தவிர்க்க வேண்டாம்.

தூங்குவதற்கு முன்பு சருமத்தை சுத்தம் செய்துவிட்டு தூங்கினால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும். சொல்லபோனால் உடல் ஆற்றலுக்கு இரவு உணவு போன்று தான் சருமத்தை சுத்தம் செய்வது. நீங்கள் சோம்பல் படவில்லையெனி உங்கள் சருமத்துக்கேற்ற நைட் க்ரீம் கொண்டு முகத்துக்கு பயன்படுத்தலாம்.

முகம் அதிகமாக மந்தமாக உணர்ந்தால் தினமும் இரண்டு வேளை முகத்தை சுத்தம் செய்யுங்கள். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த தோல் செல்களை தடுக்க முடியும்.

​சரும பி.ஹெச் அளவு

சருமத்தின் பி. ஹெச் அளவை பின் தொடர்ந்து தக்க வைப்பது மிக மிக அவசியம். பொதுவாக சருமத்தின் பிஹெச் அளவானது 5 முதல் 6 வரை மட்டுமே இருக்கும். இந்நிலையில் க்ளென்சர்கள் மற்றும் ஸ்க்ரப்கள் இதை மேலும் காரமாக்குகிறது. அதனால் சருமத்தில் விளைவுகள் உண்டாகமல் இருக்க நீங்கள் டோனர் செய்ய வேண்டும்.

சருமத்தின் பிஹெச் அளவை சமநிலைப்படுத்துவதில் தோல் பராமரிப்பு முக்கியம். அதனால் உங்கள் சருமத்துக்கு டோனர் செய்வதை மறக்காதீர்கள். அதே நேரம் இயற்கை பொருளிலிருந்து தயாரிக்கப்பட்ட வெள்ளரி மற்றும் கற்றாழை போன்றவற்றை பயன்படுத்துங்கள். சருமத்தின் பிஹெச் அளவு சரியாக இருக்கும் போது சருமத்தில் பிரச்சனைகள் இருக்காது.

​முகத்தில் வேறு பிரச்சனைகள்

முகத்தில் முகப்பரு, திட்டுகள், நேர்த்தியான கோடுகள் போன்றவை சருமத்தின் ஜொலிப்பை பெருமளவு கெடுக்க கூடியவை. இவையெல்லாம் வராமல் தவிர்க்க வேண்டும். அல்லது ஆரம்ப கட்டத்திலேயே இதை தடுக்க முயற்சிக்க வேண்டும். இதை மீறி முகத்தில் பெருமளவு பாதிப்பு இருந்தால் உங்களுக்கு இயற்கை பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சீரம் பெருமளவு கைகொடுக்கும்.

இது வயதான தோற்றத்தை கொண்ட சருமம் முதல் கரும்புள்ளிகளுக்கு தீர்வு கொடுக்கும் சீரம் வரை கிடைக்கிறது. உங்கள் சருமத்துக்கான சீரத்தை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

​சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவும்

சருமத்தை அதிகம் பாதிப்பதில் முதலிடம் கடுமையான வெயிலினால் உண்டாகும் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் தான். இவை அதிகமாக சருமத்தில் படும் போது சருமத்தின் நிறம் மாற்றமடைகிறது. சரும புற்றுநோயை உண்டாக்கும் அளவுக்கு வீரியம் கொண்டது சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள்.

சருமத்தின் பளபளப்பை உறிஞ்சும் இக்கதிர்களிலிருந்து சருமத்தை காப்பாற்றி கொள்ள சன்ஸ்க்ரின் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டாம். அதே நேரம் வாய்ப்பு கிடைத்தால் சன் பாத் என்னும் சூரிய குளியலை சில நிமிடங்களுக்கு மேற்கொள்ளுங்கள். முகம் தவிர கழுத்து, கால்கள், உடலுக்கு கிடைக்கும் போது உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சிக்கும் சருமத்தின் ஜொலிஜொலிப்புக்கும் சம்பந்தம் உண்டு. சருமத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உடற்பயிற்சி உதவுகிறது. தசைகளை நெகிழ வைக்க யோகா, ஜிம், ஜாக்கிங், ஏரோபிக்ஸ் என உங்களால் இயன்ற பயிற்சி செய்யுங்கள். இது வியர்வையையும், உடல் நச்சுகளையும் வெளியேற்றுகிறது. சருமத்துக்கு ரத்த ஓட்டம் தடையின்றி கிடைக்க செய்கிறது. பிறகு ஆரோக்கியமான ஒளிரும் சருமம் கிடைக்கிறது.

மன அழுத்தம் இருந்தாலும் கூட அது முகத்தில் பிரதிபலிக்கும் என்று சொல்வார்கள். வயதான சரும தோற்றம், நேர்த்தியான கோடுகள், சுருக்கங்கள் போன்றவற்றுக்கு மான் அழுத்தமும் காரணம். அதையும் இந்த உடற்பயிற்சி செய்வதன் மூலம் போக்கமுடியும்.

​சரும உணவுகள்

ஆரோக்கியம் போன்றே சரும ஆரோக்கியத்துக்கு பிரத்யேகமான உணவுகள் உண்டு. இது உண்மையும் கூட. தொடர்ந்து ஒரு வாரம் உங்கள் உணவு முறையை சருமத்துக்கு ஏற்றபடி மாற்றி பார்த்தால் சருமத்தில் ஜொலிப்பை காணலாம். சருமத்தின் பிரகாசத்தை நீங்கள் பார்க்கலாம்.

குறிப்பாக தக்காளி, ப்ரக்கோலி, உலர்பருப்புகள், அவகேடோ பழம், பெர்ரி, கீரைகள், மீன், எலுமிச்சை, ஆரஞ்சு, இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றை தினம் ஒருவேளைக்கு சேர்த்து எடுங்கள் வித்தியாசம் நன்றாகவே தெரியும். சருமம் வறட்சியை சந்திக்காமல் இருக்க போதுமான நீரை குடிப்பதை உறுதி செய்யுங்கள்.

தாகம் இல்லையென்று தவிர்க்காமல் உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள். நீரிழப்பு உண்டாகும் போது தோல் சேதமடையக்கூடும். குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணிரி குடிப்பதன் மூலம் சருமத்தில் அதிசயத்தை பார்க்கலாம். சருமம் பளபளப்பு மென்மை இரண்டையும் கொள்ள நீர் அவசியம்.

​நேரம் இருந்தால்

சருமத்தின் ஜொலிஜொலிப்பில் நீங்கள் செய்ய வேண்டிய தினசரி பராமரிப்புக்கு நடுவில் நேரம் கிடைத்தால் இதை செய்யுங்கள். வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு சருமத்தை அழகு படுத்தி கொள்ளலாம். காய்ச்சாத பாலை முகத்தில் தடவி ஊறவிட்டு கழுவலாம். கடலை மாவு பேக் போடலாம்.

எலுமிச்சை, தேன், சர்க்கரை அல்லது ஓட்ஸ் போன்றவற்றை கொண்டு சருமத்தை சுத்தம் செய்யுங்கள். உருளைக்கிழங்கு சாறை பயன்படுத்துங்கள். கற்றாழை பேக் போடுங்கள். வெள்ளரி, தக்காளி, வாழைப்பழம், பப்பாளி போன்ற ஃபேஸ் பேக் கூட சருமத்தை ஜொலிக்க வைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker