ஆரோக்கியம்புதியவை

சோசியல் மீடியாவிற்கு நீங்கள் அடிமையா? ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்

உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் வீட்டில் இருந்த படியே தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்கள் நமக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

சமூக ஊடகங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. கூடுதலாக மேலும் ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் குவிந்து கிடப்பதே இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். சமூக வலைத்தளம் அதிகம் பயன்படுத்துவோருக்கு மனதளவில் ஆரோக்கியம் கெடுவதாக பல ஆய்வுகள் கூறியுள்ளன.

இது தனிநபர்களிடையே தனிமை உணர்வுகளை அதிகரித்துள்ளது. மேலும் தூக்கமின்மையை அதிகரித்து பின்னர் மனச்சோர்வை உருவாக்குகிறது.இணையவழித் தாக்குதலும் மனசோர்வை உண்டாகும் முக்கிய காரணியாக அமைகின்றது.

ஜமா நெட்வொர்க்கில் (Jama Network) வெளியிடப்பட்ட ‘அசோசியேஷன் ஆஃப் ஸ்கிரீன் டைம் அண்ட் டிப்ரஷன் இன் அடல்ஸ்’ இது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடையே நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, சமூக ஊடகங்களில் அதிகம் செலவு செய்த மாணவர்களுக்கு 1 மணிநேரத்திற்கு ஒரு முறை மன சோர்வு அதிகரிப்பதாக கூறுகின்றனர். அவர்களுக்கு தனிமை, சோகம் மற்றும் நம்பிக்கையற்ற தன்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வு நேரடியாக முடிவு செய்யவில்லை என்றாலும், அதன் பயன்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு அறிவுறுத்துகிறது. அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் பழக்கங்களை உருவாக்கலாம் என கூறுகின்றது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் எதிர்மறையான தாக்கங்கள் பயனர்களின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன. மக்கள் உலகைப் பற்றி முழுமையாக மறந்துவிடுகிறார்கள், இரவில் தாமதமாக தூங்கும்போது தங்கள் ஸ்மார்ட் சாதனங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறார்கள், மேலும் சமூக ஊடக தளங்களுடன் ஈடுபடும்போது பொறுப்புகளை மறந்துவிடுகின்றார்கள் எனக் கூறுகின்றது.

மனசோர்வின் பக்க விளைவுகள்:
காணாமல் போகும் பயம் (Fear of missing out (FOMO))
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைத்தளங்கள் ஒருவரைவிட மற்றவர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றனர் என்ற உணர்வுகள் ஏற்பட வழி வகுக்கின்றது.
உதாரணமாக ஒருவரின் அழகு, அவர் பயன்படுத்தும் உடை, நகை, என அவரின் தோற்றத்தை சார்ந்த பலவற்றை இன்னொருவர் இழப்பதாக நினைப்பதால் எழும் எண்ணம்
எண்ணம் மனசோர்வில் கொண்டு போய் நிற்கவைக்கிறது. மேலும் இந்த யோசனை ஆழ்மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துல், பதட்டத்தைத் தூண்டுதல் என பலவற்றினால் ஒருவரின் நிம்மதியை குலைக்கிறது.

தனிமைப்படுத்துதல் :

பேஸ்புக், ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களின் தொடர்ச்சியான பயன்பாடுகள் தனிமையின் உணர்வை அதிகரிக்கின்றன.

மனச்சோர்வு மற்றும் பதட்டம்:

உறவுகளை விட மக்கள் சமூக ஊடகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநிலைக் கோளாறுகளை வளர்ப்பதற்கான ஆபத்துகள் ஏற்படும்.

சைபர் மிரட்டல்:

சமூக ஊடகங்களில் மோசமான கருத்துக்களைப் பகிர்வது போன்ற செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளதால் சைபர் மிரட்டல்களுக்கு வழிவகுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கங்களை குறைப்பதற்கான சில வழிகள்:

* ஆன்லைன் நேரத்தை குறைத்தல்.

* சமூக ஊடகங்களில் நீங்கள் செலவிடும் நேரத்தைக் கண்காணிக்க சில ஆப்ஸ்களை பயன்படுத்துங்கள். அதிக வீட்டு வேலைகளில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.

* உங்கள் சமூக ஊடக அறிவிப்புகளை நீண்ட நேரத்திற்கு முடக்கி வையுங்கள்.

சமூக ஊடக அறிவிப்பை முடக்குவது உங்களை போனிலிருந்து தள்ளிவைக்கும்.

* நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுங்கள்

* சமூக ஊடகங்களை கவனத்துடன் பயன்படுத்துங்கள். எதிர்மறை உணர்வுகள் அல்லது FOMOஐ தவிர்க்க உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். உங்கள் படைப்பாற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்த சமூக ஊடகங்களின் நேர்மறையான தளங்களில் கவனம் செலுத்துங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker