உறவுகள்புதியவை

தாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க…

திருமணம் என்பதும் தாம்பத்திய உறவு என்பதும் மிகவும் புனிதமான ஓன்று. உயிரினங்கள் அனைத்தும் தங்களது இனப்பெருக்கத்திற்காக உறவில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே உறவில் ஈடுபட்டு இனத்தை பெருக்குகின்றன. ஆனால், மனிதர்களாகிய நமக்குத்தான் இதன் விசயத்திற்கு நேரம் காலம் பார்ப்பது இல்லை. பொதுவாக, படுக்கையில் உறவை தொடங்கும் முன்பு ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்ய வேண்டுமோ அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை நாம் செய்யவேண்டும். ஆனால், சோர்வு காரணமாகவும், களைப்பு காரணமாகவும் பலரும் இதனை பின்பற்ற தவறுகிறார்கள். கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று வாங்க பாக்கலாம்.

1. உடனே எழுந்திருப்பது கூடாது

உறவுக்குப்பின் படுக்கையில் இருந்து உடனே எழுந்து போவதை தவிர்க்க வேண்டும். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என அடுத்த கணமே படுக்கையில் இருந்து எழுந்து செல்வது சில ஆண்களின் வழக்கம். இப்படி செய்வதால் தம்பதியினரிடம் நெருக்கம் நீடிக்காது. இதற்க்காக மட்டும் தான் நான் இருகிறேன என்ற எண்ணம் மனைவி மனதில் தோன்ற வாய்ப்புண்டு. எனவே உறவுக்கு பின் சிறிது நேரம் துணையுடன் விளையாடவேண்டும்.

2. குளிப்பது

உறவு முடிந்த உடனே குளிக்க செல்வது ஆண், பெண் இருவரிடமும் உள்ள பழக்கம். இதனை முதலில் குறைத்துக்கொள்ள வேண்டும். உறவுக்கு பிறகு சிறிது நேரம் மனைவி அல்லது துணையுடன் தலையை கோதி மனம் விட்டு பேசி பேச வேண்டும். இதனால் உறவில் மகிழ்ச்சி நீடிக்கும்.

3. வீட்டைவிட்டு வெளியேறுவது

உறவு முடிந்து சிலமணி நேரம் துணையுடன் வீட்டில் நேரம் செலவிட வேண்டும். அதேபோல் வீட்டில் இருந்து வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் குளித்துவிட்டுதான் செல்ல வேண்டும்.

4. உணவு மற்றும் மருந்து மாத்திரை

உறவுக்கு முடித்த பிறகு வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. அதே போல, உறவுக்கு முன்பும் வயிறு முட்டசாப்பிடக்கூடாது. பால் அளவாக குடிக்கலாம். உடனடியாக மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுக்கு கடுமையான வேலை செய்வதைதவிர்த்து விட வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker