பேஷன் உலகில் நாளுக்கு நாள் பல ஸ்டைல்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை அனைத்து நன்மை தருவதில்லை.
செயற்கை கண் இமைகளை பொருத்திக் கொள்பவர்களுக்கு கண் பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பல பேருக்கு நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கையாக வளரும் இமை மயிர் பலமாக சேதமடைந்து உதிர்ந்து விடும். சிலருக்கு நோய் தொற்று ஏற்படாவிட்டாலும் தொடர்ச்சியாக செயற்கை கண்ணிமைகள் பயன்படுத்துவதால் இயற்கையாக வளரும் கண் இமைகள் கொட்டி, அதன்மேல் செயற்கை இமைகள் கூட பொருத்த முடியாமல் போகலாம்.
செயற்கை கண் இமைகள் நமக்கு நாமே பொருத்திக் கொள்ளக்கூடியது அல்ல. இதற்காக சிறப்பு அம்சம் கொண்ட பார்லர்கள் உள்ளன. எல்லா பார்லர்களிலும் இதற்கான சிறப்பு வசதிகள் கிடைப்பதில்லை இல்லை. வெகு சில பார்லர்களில், அதிலும் வெகு சிலபேர் மட்டுமே செயற்கை கண் இமைகள் பொருத்துவதில் கற்றுத் தேர்த்தவர்களாக உள்ளனர் . அவர்களிடம் நேரம் கிடைப்பதும் அரிதினும் அரிதாகவே இருக்கும்.
செயற்கை கண் இமைகளைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதற்கென தனியாக பிரஷ் வைத்து கோதி விட வேண்டும். தண்ணீரில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றை செய்யாவிட்டால் ஆரோக்கியம் மட்டுமல்ல. அதனால் உண்டாகும் அழகும் கெட்டுவிடும்.
மஸ்காரா பயன்படுத்துவதே போதுமான அழகை கண்களுக்கு அளிக்கிறது. கண் இமைகள் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் அழகு, வெறும் மஸ்காராவிலேயே கிடைக்கிறது. இன்றைய தேதியில் மஸ்காராவின் ரகங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன.
கண் கண்ணாடி அணிபவர்கள் கட்டாயம் செயற்கை கண் இமைகள் பொருத்தக்கூடாது. அது பொருத்தமானதாக இருக்காது. ஆரோக்கியமாகவும் இருக்காது. கண் இமைகள் சற்று பெரிதாக இருப்பதால் கண்ணாடியில் பட்டு சுருண்டுவிடுவதும், உருத்தலை ஏற்படுத்துவதும் தொந்தரவாக இருக்கும். செயற்கை கண் இமைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது.
கண் இமைகள் நீளமாக இருப்பதால் மற்ற மேக்கம் போடுவதோ, கண் மை வைத்துக்கொள்வதோ கூட முடியாமல் போகும். மேக்கப் போடுவது, பவுண்டேசன் கோட்டிங் கொடுப்பது என எந்த வித அழகுபடுத்தும் வேலைகளையும் நாம் நினைத்தது போல் செய்து கொள்ள முடியாது. செயற்கை கண் இமைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள நேரிடும்.