புதியவைமருத்துவம்

பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா?… அப்போ இந்த பிரச்சனை இருப்பது நிச்சயம்…

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/ கருப்பை கட்டிகள். இந்த பிரச்சனையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த பிரச்சனையால் டீன் ஏஜ் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கருப்பை கட்டிகள் இருந்தால், அந்த முட்டைகளானது சரியாக முதிர்ச்சி அடைவதற்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்காமல்,

அந்த முட்டைகள் கட்டிகளாக மாறி விடுவதால், மாதவிடாய் சுழற்சி தடைபட்டு, கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. குறிப்பாக மலட்டுத் தன்மையை உண்டாக்குகின்றன. அது மட்டுமின்றி, அந்த கட்டிகள் நாளடைவில் ஆண் ஹார்மோன்களை சுரக்க ஆரம்பிக்கின்றன. இந்த சினைப்பைக் கட்டிகளை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

அதற்கு முதலில் அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு அதன் அறிகுறிகளை சாதாரணமாக எண்ணாமல், சரியாக கவனித்து அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை பெற்று வந்தால், இதனால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

* சினைப்பைக் கட்டிகள் இருந்தால், அதன் அறிகுறிகளுள் முதன்மையாக தென்படுபவை தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி. அதிலும் மாதவிடாய், பல மாதங்களாக தள்ளிப் போனால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால், அவை சருமத்தில் அதிகப்படியான முகப்பருக்களை உருவாக்கும்.

* ஆண் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகம் இருந்தால், முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி வளர ஆரம்பிக்கும்.

* முறையற்ற மாதவிடாய் சுழற்சியுடன், தலையில் வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், அதுவும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியே. ஏனெனில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுகிறது.

* குறுகிய காலத்திலேயே உடல் எடையானது அளவுக்கு அதிகமாக அதிகரித்தால், அப்போது உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பாருங்கள். ஏனெனில் கருப்பைக் கட்டிகள் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும்.

* ஹார்மோன்கள் தான் மனநிலையை வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு மனக் கவலையை அதிகரிக்கும்.

* திடீரென்று கருப்பு நிறத்தில் சருமம் உள்ளதா? அப்படியெனில் கருப்பை கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

அதிலும் கழுத்து, அக்குள், முழங்கை போன்ற இடங்களில் கருமை அதிகரித்திருந்தால், அதற்கு கருப்பைக் கட்டிகள் இருக்கிறது என்று அர்த்தம்.

* பருவம் அடைந்த இரண்டு மூன்று மாதத்திற்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறாமல் இருந்தால், அதுவும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker