சமையல் குறிப்புகள்புதியவை

சூப்பரான நெத்திலி மீன் தொக்கு

சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • நெத்திலி மீன் – கால் கிலோ
 • சாம்பார் வெங்காயம் – 10
 • தக்காளி – 4
 • மிளகாய் – 4
 • மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – சிறிதளவு
 • கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்
 • பூண்டு – 4 பல்
 • கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
 • சீரகம், வெந்தயம் – கால் டீஸ்பூன்
 • எண்ணெய், உப்பு – தேவைக்கு
 • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
 • தேங்காய் பால் – கால் கப்
 • கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:

 • நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
 • புளியை நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
 • கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
 • பிறகு வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
 • வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
 • அடுத்து அதில் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் உப்பு தூவி கிளறவும்.
 • பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
 • கொதிக்க தொடங்கியதும் நெத்திலி மீன், தேங்காய் பால் சேர்க்கவும்.
 • கெட்டியாகி தொக்கு பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker