அழகு..அழகு..புதியவை

உருளைக்கிழங்கை வெச்சு விதவிதமா ஃபேஸ்மாஸ்க் போடுங்க, எல்லாமே அழகு தரும்!

உருளைக்கிழங்கு சமையலை காட்டிலும் சருமத்துக்கு பலவிதமான நன்மைகள் தரும் என்பதை அறீந்திருக்கிறோம். அதோடு கூந்தலுக்கும் கூட இவை நன்மை செய்கிறது.

முகத்துக்கு உருளைக்கிழங்கை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்த்திருக்கிறோம். இப்போது உருளைக்கிழங்கை கொண்டு விதவிதமான ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பு பற்றி அறிந்துகொள்வோம். இவை கூடுதலாக உங்கள் சருமத்துக்கு ஜொலிஜொலிப்பை கொடுக்கும் என்பதை பயன்படுத்திய பிறகு நீங்கள் உணர தொடங்குவீர்கள். அதோடு இவை கடினமானதும் அல்ல. எளிமையாகவும் தயாரிக்க முடியும்.

​உருளைக்கிழங்குடன் மாதுளையும் தயிரும்

உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கி அதை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மாதுளை முத்துக்கள் கால் கப் சேர்த்து மீண்டும் நைஸாக அரையுங்கள்.

தண்ணீர் சேர்க்க வேண்டாம். அப்படியும் இறுக்கமாக இருந்தால் பால் அல்லது கெட்டித்தயிர் சேர்த்து அரைக்கலாம். எண்ணெய்ப்பசை சருமமாக இருந்தால் எலுமிச்சைச்சாறு சிறிது சேர்க்கலாம். நன்றாக குழைவாக மசித்த இந்த பேஸ்ட்டை இறுக்கமாக ஆகும் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருங்கள்.

அரைமணி நேரம் கழித்து அதை வெளியில் எடுத்து வட்ட வடிவில் மசாஜ் போன்று தேய்க்கவும். முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி தடவியபடி தேய்க்கவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால் முகம் மென்மையாக மிருதுவாக இருப்பதை உணரலாம். முகத்தில் இருக்கும் கறைகள் வெளியில் தெரியாது.

​உருளைக்கிழங்கும் வைட்டமின் இ ஆயில்

உருளைக்கிழங்கு சாறாக எடுத்து தடவும்போது அவை முகத்தில் முழுவதும் படிவதில்லை என்று நினைப்பவர்கள் இதை செய்யலாம். உருளைக்கிழங்கு தோல் சீவி நறுக்கி அதை வட்டவடிவில் நறுக்கி வைக்கவும். ஒரு ஸ்பூனால் அதன் நடுவில் கீறலை போட்டு போட்டு வைத்தால் அதிலிருந்து சாறு வரும். அந்த சாறின் மீது வைட்டமின் இ ஆயிலை தடவி அதிகம் பிழிய வேண்டாம் அப்படியே முகத்தில் வட்ட வடிவில் தேயுங்கள்.

குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள், பருக்கள் இருக்கும் இடங்களில் தடவி கொண்டே இருக்க வேண்டும். இடமிருந்து வலமாக வடமிருந்து இடமாக என்று தடவி கொண்டே ஒரு பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்தால் போதும். பிறகு மந்தமான நீரில் முகத்தை கழுவி மெல்லிய துணியால் முகத்தை ஒற்றி எடுத்தால் முகத்தின் நிறம் வெண்மையாகும்.

​உருளைக்கிழங்கும் கற்றாழையும்

உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி, அதனுடன் கற்றாழை ஜெல்லை (கற்றாழையை நீரில் அலசி எடுக்கவேண்டும்) சம அளவு எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். நீர் விட வேண்டாம். தேவையெனில் பன்னீர் சேர்த்து அரைக்கவும்.

முகத்தில் எண்ணெய்ப்பசை கூடுதலாக இருந்தால் எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி விடவும். 45 நிமிடங்கள் வரை முகத்தில் ஊறவிட்டு பிறகு முகத்தை கழுவி எடுக்க வேண்டு. இதை தினமுமே கூட செய்துவரலாம்.

இவை முகத்தில் இருக்கும் அதிகப்படியான வறட்சியை போக்குவதோடு சருமத்துக்கு ஈரப்பதத்தையும் அளித்து பொலிவாக வைத்திருக்க உதவும். முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், அழுக்குகள் நீக்கி முகம் பளிச்சென்று வைத்திருக்க உதவும். கரும்புள்ளிகளையும் நீக்கும் எளிமையான செயல்முறை.

​உருளைக்கிழங்கும் முட்டையும்

முகத்தில் பருக்களும், கட்டிகளும் சமயங்களில் எரிச்சலையும், அரிப்பையும் உண்டாக்க கூடும். இதற்கு உருளைக்கிழங்கை மண் போக அலசி தோல் நீக்கி நீர்விடாமல் மசித்து அதில் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி நன்றாக காயவிடவேண்டும்.

30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உண்டாகும் எரிச்சல், அரிப்பு நீங்கும்.

​கிடைக்கும் நன்மை

உருளைகிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி சத்துகள், நார்ச்சத்து, மாவுச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, இரும்பு மற்றும் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருக்கிறது. உருளைக்கிழங்கை முகத்துக்கு பயன்படுத்துவதால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக்கும்.

கண்களை சுற்றி படரும் கருமை போகும். கண் இரப்பையின் கீழ் இருக்கும் வீக்கத்தைக் குறைக்கும். சருமத்துக்கு கிடைக்கும் இயற்கையான ப்ளீச்சிங் போன்று உருளைக் கிழங்கு செயல்படும். உருளைக்கிழங்கு எளிதாக கிடைக்ககூடிய ஒரு பொருள் தான். தினமும் இதை பயன்படுத்தினால் முகத்தின் அழகை பெரிதும் பார்க்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker