உறவுகள்புதியவை

கலவியில் பெண்களுக்கு பிடித்தது என்ன? என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்?…

தாம்பத்திய வாழ்க்கையைப் பொருத்தவரை பெண்ணின் விருப்பம் இரண்டாம் பட்சமாகவே இருப்பதும் ஆணின் விருப்பம் முன்னிலைப்படுத்தப் படுவதும் குடும்பத்தில் என்ன மாதிரியான சிக்கல்களை உருவாக்கும். தங்களுக்கு என்ன மாதிரியான விஷயங்கள் பிடிக்கும் என பெண்கள் கருதுகிறார்கள் ஆகியவற்றைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். அதனால் பெண்களும் தங்களுடைய உறவு குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் அவசியம். அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உடலுறவும் பெண்களும்

திருமணத்துக்குப் பின்பான வாழ்க்கையில் ஆண்களை விட, பெண்கள் தங்களுக்கான நிறைய விஷயங்களை இழந்திருப்பார்கள். தான் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியே வருவது, அவர்களிடம் இருந்து அந்நியப்படுவது, தனக்குப் பிடித்ததெல்லாம் இரண்டாம் பட்சமாக மாறுவது என பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஒருபோதும் மாற்றிவிடவோ சரிசெய்து விடவோ ஆண்களால் முடியாது. அதனால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தன்னுடைய துணையாக வரும் பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வது நல்லது.

​கலவி வாழ்க்கை

சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது வெறுமனே அவளுக்குப் பிடித்த பொருள்களை வாங்கிக் கொடுப்பது மட்டும். தாம்பத்ய வாழ்க்கையிலும் பெண்ணை திருப்திப்படுத்துவது மிக முக்கியம். ஏனென்றால் ஆண்கள் “அந்த” விஷயத்தில் தங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால் பெண்கள் நேரடியாகவோ சொல்லவோ அல்லது வெளிப்படுத்தவோ மாட்டார்கள். அதனால் ஆண்கள் தாங்களாகவே பெண்களின் சில செய்கைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி, பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி பெண்களுக்கு “அந்த” விஷயத்தில் என்னவெல்லாம் பிடிக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

​உறவில் திருப்தி

தாம்பத்திய வாழ்க்கையில் பெண்கள் திருப்தியடைய என்னவெல்லாம் காரணமாக இருக்கின்றன என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு தங்களுக்கு இருக்கும் தாம்பத்திய உறவு குறித்த பிரச்சினைகளையும் தங்களுக்கு என்ன பிடிக்கும், ஆனால் என்ன நடக்கிறது, எவ்வளவு திருப்தியடைகிறோம் என்பது குறித்து பேசுகிறார்கள். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பெண்களில் அதிகமானோர் தாங்கள் உடலுறவில் அவ்வளவாக திருப்தி அடைவதில்லை என்றே கூறியிருக்கிறார்கள். இவ்வளவு வெளிப்படையாகப் பெண்கள் கூறும் அளவுக்கு என்ன நடக்கும்? ஆண்கள் பெண்களின் விருப்பத்தை உறவில் இரண்டாம் பட்சமாக பார்ப்பதும், அவர்களைப் பற்றி யோசிக்காமல் தனக்குத் தோன்றியபடி நடப்பது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

​எதனால்?

இதற்கான காரணங்களாக அவர்கள் தெரிவிப்பது என்னவென்றால், உறவில் முழு இன்பமடைய வெறும் உடல் இயக்க பாலுறவு மட்டுமே காரணமல்ல என 72 சதவீதப் பெண்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, உடல் ரீதியாக அணுகுதல் மட்டுமே பெண்களை முழுமையாகத் திருப்தியடையச் செய்வதில்லை. அதோடு மனவியல் ரீதியான அணுகுமுறையையும் நெருக்கத்தையும் பெண்கள் விரும்புகிறார்கள். அதை தன்னுடைய துணைவன் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கவும் செய்கிறார்கள்.

​ஆய்வு முடிவு

இப்படி பல பெண்களும் தாங்கள் எதிர்பார்ப்பது வெறுமனே உடல் ரீதியான இச்சையைத் தீர்த்துக் கொள்வது அல்ல. அதைத் தாண்டி மன ரீதியாக, முன்விளையாட்டுக்கள், தன்னைப் பற்றிய ஓர் அங்கீகாரம் போன்ற சின்ன சின்ன மகிழ்ச்சி தரும் விஷயங்களைத் தான் முதலில் எதிர்பார்க்கிறார்கள். உடலுறவில் ஊடுருவுதல் ஒரு பெண்ணை உச்சம் காண வைக்கும் என எண்ணினால், அது முற்றிலும் தவறு என நிரூபித்துள்ளது அந்த ஆய்வு

உடலுறவு மற்றும் திருமணம் பற்றிய ஆய்வு ஒன்றைப் பற்றி ஜர்னல் ஆய்வு பத்திரிக்கையில் வெளியான அறிக்கை ஒன்றில், 72% பெண்கள் மூலப்பகுதி தீண்டல் மூலமாக தான் ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலை அடைவதாகக் கூறியுள்ளனர். அதாவது கிட்டதட்ட சுய இன்பத்துக்கு நிகரான ஒரு விஷயம் தான்.

​என்ன நினைக்கிறார்கள்?

இந்த ஆய்வில் 18 – 94 வயதுக்குட்பட்ட 1,055 பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்கள் தங்கள் உடலுறவு வாழ்க்கை பற்றி கேட்கப்பட்ட ஆன்லைன் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தனர். அதன் மூலமாகவே இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த கருத்துக்கணிப்பையும் நாம் அப்படியே எளிதாக எடுத்துக் கொண்டுவிடவும் முடியாது. இதுகுறித்து ஆய்வே செய்யப்படவில்லை என்றாலும் கூட, இந்த விஷயம் குறித்து ஆண்கள் அதிக கவனம் செலுத்துவது இருவருக்குமே நல்லது.

​ஆய்வு சொல்லும் உண்மை

இந்த ஆன்லைன் ஆய்வு முடிவு வெளியிட்டின் படி, 36.6% உடலுறவில் கலவுதல் மூலமாக அடையும் இன்பத்தை காட்டிலும், பெண்குறி மூலம் தீண்டுதல் மூலமாக அடையும் இன்பமே அதிகம் என கூறியுள்ளனர். 18.4% பெண்கள் ஊடுருவுதல் மூலம் அடையும் இன்பமே உச்சம் காண போதுமானது என கருத்து தெரிவித்துள்ளனர்.

​உறவுக்கு முன்பு

மேலும், எவ்வகையிலான பெண்குறி தீண்டுதல் விரும்புகிறார்கள் என்ற கேள்விகளும் கேட்கப்படிருந்தன. அதில், கிளிடோரிஸ் சர்க்ளிங் மோஷன், ஹை அன்ட் லோ இன்டன்சிட்டி மோஷன், ரிதமிக் மோஷன் போன்றவை அதிகம் விரும்புவதாக கருத்து பதிவு செய்துள்ளனர்.

உறுப்புத் தீண்டலைத் தாண்டி, அதிக உச்சம் காண தங்களுக்குப் பிடித்தது போல், முன் விளையாட்டுக்கள், கட்டியணைத்தல், இதழோடு இதழ், நெற்றி என முத்தம் தருதல் ஆகிய செயல்களில் ஈடுபடுதல் அவசியம் எனவும், ஃபோர்ப்ளே தான் உணர்வு ரீதியாக துணையுடன் தாம்பத்தியத்தில் இணைய உதவுகிறது எனவும் நினைக்கிறார்களாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker