ஆரோக்கியம்புதியவை

உங்க வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே எடுத்துடுங்க! புற்றுநோயை உண்டாக்குமாம்

நாம் செய்கின்ற, பயன்படுத்துகின்ற ஒவ்வொரு செயலும் பொருட்களும் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. அந்த வகையில், நாம் படுக்கை அறையில் பயன்படுத்த கூடிய பல வித பொருட்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்துமாம் எப்படி படுக்கை அறையில் உள்ள எவ்வகையான பொருட்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதை அறிவோம் வாருங்கள்.

தலையணை உறை

இன்று நாம் பயன்படுத்தும் தலையணை உறையானது முழுக்க முழுக்க வேதி பொருட்கள் நிறைந்த பஞ்சினால் தயாரிக்கின்றனர்.எனவே, தலையணை வாங்கும் போது, இயற்கை முறையில் உற்பத்தி செய்த காட்டன் பஞ்சினால் தயாரித்ததா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள்

படுக்கை அறையில் நீங்கள் வைத்துள்ள அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் நீங்கள் எடுத்து விட வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் பொம்மைகள், கவர்கள், பரிசுகள். ஏனெனில், இவற்றில் formaldehyde என்ற மோசமான வேதி பொருட்கள் கலக்கப்படுகின்றன.

எனவே, இவை படுக்கை அறை வெப்பம் அடையும் போது இந்த பிளாஸ்டிகுகள் வேதி வினை புரிந்து நம் உடலில் ஒட்டி கொண்டு புற்றுநோயை தரும்.

கலர் கலர் பெயிண்டுகள்

வீட்டிற்கு கலர் கலராக பெயிண்ட் அடிக்க விரும்பி, பல பக்க விளைவுகளை நீங்களே பெற்று கொள்ளாதீர்கள். அதிக வேதி தன்மை அற்ற பெயிண்ட்கள் உடலுக்கு விளைவை தராது. குறிப்பாக படுக்கை அறையில் மிகவும் மென்மையான நிறத்தையே அடிக்க வேண்டும். இல்லையெனில் சுவாச பிரச்சினை, புற்றுநோய் அறிகுறிகள் ஏற்படலாம்.

ஸ்மார்ட் போன்கள்

இன்று நம்மில் பலரும் குழந்தையை போல நம் கைப்பேசியை பக்கத்தில் வைத்து கொண்டே தூங்குவோம். ஆனால், இதில் தான் நமக்கு எமன் இருக்கின்றான் என்பது நாம் அறிந்திராத உண்மை. ஆம், புற்றுநோயை உண்டாக்கும் தன்மை இவற்றில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான கதிர்வீச்சில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தரையின் விரிப்புகள்

படுக்கை அறையில் உள்ள தரையின் விரிப்புகளை தவிர்த்து விடுங்கள். இவை மிருகங்களின் தோலின் மூலம் தயாரிக்கப்படுவதால் உடலுக்கு ஒவ்வாமையை தந்து விடும். மேலும், சில நச்சு தன்மை உள்ள பொருட்களினால் தரையின் விரிப்புகள் தயாரிக்கப்படுவதால் ஆஸ்துமா, புற்றநோய் போன்றவை ஏற்படலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker