புதியவை

வாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!

இந்திய நெல்லிக்காய் என்று அறியப்படும் ஆம்லா ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது.

1. கொழுப்பை எரிக்கிறது:

நீங்கள் கூடுதலான எடையை குறைப்பதில் நம்பிக்கை இழந்திருந்தால் நெல்லிக்காய் ஜூஸை குடியுங்கள். ஏனென்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் மேற்கொண்டு படியுங்கள்.

நெல்லிக்காய் ஜூஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து புரத கூட்டிணைப்பை மேம்படுத்துகிறது, இதனால் நமது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு அனுமதிப்பதில்லை.

மேலும் இது நம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு கொழுப்புக்களை எரித்து பங்களிப்பதன் மூலம் ஆற்றல் நிலைகளை மேலே உயர்த்துகிறது.

2. மலச்சிக்கலுக்கு நிவாரணமளிக்கிறது:

கழிவை வெளியேற்ற இயக்கங்களை ஒழுங்குப்படுத்தி மலச்சிக்கலிலிருந்து நம்மை விடுவிப்பதால் உங்கள் வயிறு இந்த பானத்தை மிகவும் விரும்பும். இதில் இயல்பாகவே நார்ச்சத்துக்கள் செறிந்து இருந்தாலும் அதிகப்படியான நெல்லிக்காய் ஜூஸை பருகக்கூடாது என்பதில் கவனமாக இருந்து மிதமாக உட்கொள்ளுங்கள்.

3. இரத்தத்தை சுத்திகரிக்கிறது:

நெல்லிக்காய் ஜூஸ் ஒரு இயற்கையான இரத்த சுத்திகரிப்பானாகும். இது இரத்தத்திலிருந்து தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி ஹீமோகுளோபினையும் இரத்தச் சிகப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது.

இயற்கையாகவே நச்சுக்களை நீக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால் இதில் செறிந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளின் உதவியோடு இரத்தத்தை சுத்திகரித்து சருமத்தை ஒளிரச் செய்கிறது.

4. கண்பார்வையை மேம்படுத்துகிறது:

நீண்ட காலத்திற்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால் ஒருவருடைய கண்பார்வை திறன் வெகுவாக மேம்படுகிறது. நெல்லிக்காயில் இயற்பண்பாக விட்டமின் சி நிறைந்துள்ள காரணத்தினால் இது பார்வையை பழுதுபடாமல் பாதுகாப்பதோடு கண் தசைகளை வலிமைப்படுத்துகிறது.

5. இதயத்திற்கு நல்லது:

வழக்கமாக நெல்லிக்காய் சாற்றை பருகுவது உண்மையில் இதயத்திற்கு மிகவும் நல்லது. எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்! இந்த ஜூஸ் கெட்ட கொழுப்பு நிலைகளை அடக்குவதால் இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் முன்கூட்டி தடுக்கப்படுகின்றது. மேலும், இந்த ஜூஸில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்களும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் இதயத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு உதவுகிறது இதனால் பல இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

6. எலும்புகளுக்கு நல்லது:

நம் எலும்புகளின் அமைப்பிற்கு கால்சியம் மிக அத்தியவசிமான உட்கூறு என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. நெல்லிக்காய் ஜூஸ் மிகச் சிறந்த முறையில் நமது உடல் கால்சியத்தை கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ஆம்லா ஜூஸில் நிறைந்துள்ள ஏராளமான விட்டமின் சி சத்தினால் இது நடைபெறுகிறது.

7. மாதவிடாயினால் ஏற்படும் வயிற்று தசைப்பிடிப்புகளுக்கு :

மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் சங்கடமான மற்றும் வலி மிகுந்த தசைப்பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெற இயற்கை நமக்களித்த இயற்கையான தீர்வு நெல்லிக்காயாகும். நெல்லிக்காய் ஜூஸில் பரவலாக விட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துக்களும் மினரல்கள் எனப்படும் கனிமச் சத்துக்களும் இயல்பாக நிரம்பியுள்ளது.

மாதவிடாய் சுழற்சியின் போது இந்தச் சாறு நமது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு மட்டுமில்லாமல் தசைப்பிடிப்புகளை தடுத்து மேலும் ஒரு ஆறுதலான உணர்வைக் கொடுக்கிறது.

8. ஆஸ்துமாவிலிருந்து விடுவிக்கிறது:

நெல்லிச் சாறுடன் சில துளிகள் தேன் கலந்து நீண்ட காலத்திற்கு உட்கொண்டு வந்தால் ஆஸ்துமா தாக்குதல்களை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். உண்மையி்ல் ஒரு நாளுக்கு இரண்டு வேளை ஆம்லா ஜூஸைப் பருகி வந்தால் ஆஸ்துமா மற்றும் அது தொடர்பான சுவாசப் பிரச்சனைகளுக்கு திறம்பட குணமளிக்கிறது.

9. புற்றுநோயைத் தடுக்கிறது:

இன்றைய உலகில் மக்கள் புற்றுநோய் என்னும் கொடூரமான நோயால் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஆம்லா ஜூஸ் அதன் செறிவான ஆன்டி ஆக்ஸிடன்டுகளுடன் மீட்கும் கரங்களாக உங்களுக்கு உதவ முன்வருகிறது.

நெல்லிக்காய் ஜூஸில் சூப்பராக்ஸைட் டிஸ்முயுடேஸ் (எஸ்ஓடி) எனப்படும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. இது ஒற்றை மின்னணு அயனிகளைக் கட்டுப்படுத்துவதால் புற்றுநோய் தடுக்கப்படுகிறது என்பதை பிரத்யேகமாகக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

10. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் உங்களை காப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் என்னும் சக்தி வாய்ந்த இயற்கையான உதவி இருக்கும் போது, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

நெல்லிக்காயிலுள்ள குரோமியம் என்றழைக்கப்படும் மூலக்கூறு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்களிக்கிறது மேலும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. நீரிழிவு நோயின் மீது நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தச் சாற்றுடன் மஞ்சளையும் தேனையும் கலந்து பருக வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker