ஆரோக்கியம்புதியவை

மனசு ரொம்ப சோர்வா இருக்கா? இதயநோய் வர வாய்ப்பிருக்காம்… கவனமா இருங்க…

மன அழுத்தம் தான் இருக்கிற எல்லா நோய்க்கும் முக்கிய காரணமாக அமைகிறது. நீங்கள் மன அழுத்தத்தை நீக்கனால் உங்க ஆரோக்கியமும் நல்லா இருக்கும். தேவையில்லாத மன அழுத்தம் இதய நோய்கள் வரை இழுத்து வர வாய்ப்பு உள்ளது.

கவலை வந்தால் போதும் இல்லாத நோயெல்லாம் வந்து விடும் என்பார்கள். அந்தளவுக்கு மனச்சோர்வு ஒருவரை பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகிறது. தேவையில்லாத விஷயங்கள், பிரச்சனைகளை கண்டு கவலை அடைவது, தொற்று நோய்கள் குறித்த பயம் இவைகளே மனச்சோர்வு ஏற்பட முக்கிய காரணமாகிறது. மனச்சோர்வு மனம் சார்ந்த ஒரு விஷயமாக இருந்தால் கூட உங்களுக்கே தெரியாமல் இது உடல் நலத்தையும் பாதிப்படையச் செய்து விடும். மனச்சோர்வு நம்மை அமைதியாக கொல்லும் வல்லமை படைத்தது. மனச்சோர்வு உள்ள மக்கள் தங்கள் துன்பத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஆறுதல் அடைகின்றனர். இதுவரை மனச்சோர்வை எப்படி விரட்டுவது எப்படி போக்குவது போன்ற விவரங்களை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். தற்போது மனச்சோர்வு உங்க உடல் நலத்தை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இதய ஆரோக்கியமும் மனச்சோர்வும்

உண்மையில் மனச்சோர்வும் உங்க இதய ஆரோக்கியமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு உள்ளது என்றே கூறலாம்.கனடாவில் உள்ள சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு மனச்சோர்வு அறிகுறிகளுக்கும் ஆரம்பகால மரண அபாயத்திற்கும் இடையிலான தொடர்புக்கான சான்றுகளை வழங்குகிறது. இந்த ஆய்வு 21 நாடுகளைச் சேர்ந்த 1,45,862 நடுத்தர வயது பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலனவர்களில் இதய பிரச்சினைகளில் 20% அதிகரிப்பும் மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மனச்சோர்வு அறிகுறிகளைக் கொண்டவர்களில் இறப்பு ஆகியவற்றையும் கண்டறிந்தது. நகர்ப்புறங்களில் பார்த்த போது இதய பிரச்சனைகள் ஆண்களுக்கு இருமடங்கு அதிகமாக இருப்பதும் இதன் மூலம் தெரிய வந்தது.

குறிப்பாக தற்போது மக்கள் மனச்சோர்வு அடைவதற்கு கோவிட் 19 ம் ஒரு காரணமாக உள்ளது. அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு பகுப்பாய்வின்படி, சமூக தனிமைப்படுத்தலின் விளைவுகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் இந்த தனிமைப்படுத்தலால் மக்கள் மனச்சோர்வு அதிகம் அடைகின்றனர். யாருடனும் பேச முடியாமல், வெளியே செல்ல முடியாமல் போன்ற சிக்கல்களை அனுபவிக்கிறார்கள்.

இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்னவென்றால் இதய நோய் மற்றும் ஆரம்பகால மரணத்தைத் தடுக்கும் போது புகைபிடித்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற பாரம்பரிய ஆபத்து காரணிகள் போல மனச்சோர்வும் இதய நோய்க்கான முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்று தரவு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு முடிவு, தற்போதுள்ள உலக சுகாதார அமைப்பு (WHO) கொள்கைகளுக்கு சிகிச்சையை ஒருங்கிணைப்பதற்கும், மனநல கோளாறுகளைத் தடுப்பதற்கும் கவனிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திகிறது.

மனச்சோர்வின் அறிகுறிகள்

உங்களைச் சுற்றியுள்ள நபர் மனச்சோர்வுக்கான அறிகுறிகளை இந்த வகையில் காட்டுவார்.

குறைந்த மனநிலை, ஆர்வம் குறைந்து போதல், ஆற்றல் குறைதல், மோசமான செறிவு, இருண்ட மற்றும் எதிர்காலத்தை பற்றிய அவநம்பிக்கையான பார்வை, தூக்கத்தில் மாற்றம், பசி மற்றும் பாலியல் ஆசை போன்றவற்றை காட்டினால் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அவர்கள் மனச்சோர்வில் இருந்தால் உடனடியாக உளவியல் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள் அல்லது அவர்களுக்கு உதவி செய்யுங்கள்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker