உறவுகள்புதியவை

அன்பையும், காதலையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறீர்களா…?

தங்களை மகிழ்ச்சியானவர்களாக சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும், தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? ‘இல்லை’ என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

அன்பையும், காதலையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறீர்களா…?


சமூக ஊடகங்களில் வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் காதலர்கள், தம்பதிகளிடையே பெருகிவருகிறது. தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்ற அந்தரங்கமான தருணங்களின் போது
எடுக்கப்பட்ட படங்களை பேஸ்புக், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக ஊடகங்களில் பேரார்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தங்களை மகிழ்ச்சியானவர்களாக சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும், தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? ‘இல்லை’ என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. தங்களுடைய மகிழ்ச்சியான உறவை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்களே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்களாம். மற்றவர் களிடம் அப்படிக் காட்டிக் கொள்வதால், தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்களுக்கு சமூக ஊடகங்களில் அதை நிரூபிக்க வேண்டிய தேவை எழுவதில்லை. அவர்களுக்குப் பொறாமை ஏற்படுத்தும் நோக்கமும் இருப்பதில்லை.

டென்மார்க்கில் உள்ள மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், பேஸ்புக்கை ஒரு வாரம் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், ஒரு வாரம் பேஸ்புக்கை விட்டு விலகி இருந்தவர்களுக்கு வாழ்க்கையின் மீதான மனத்திருப்தி அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

காதலர்கள், தம்பதிகளில் யாராவது ஒருவர், பிரச்சினையை எதிர்கொண்டாலோ, மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ அது சமூக ஊடகங்களில்தான் முதலில் வெளிப்படுகிறது. காதலர்கள் தொடர்ந்து தங்களுடைய பரஸ்பர அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக்கொண்டி ருப்பதற்கு முக்கியக் காரணம் தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருக்கிறது என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்குத்தான். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள் கிறார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker