சமையல் குறிப்புகள்புதியவை
முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா
தேவையான பொருட்கள் :
- முளைகட்டிய பச்சைப்பயறு – ஒரு கப்
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு
- ஆப்பசோடா – ஒரு சிட்டிகை
- சர்க்கரை நீர் – 2 டீஸ்பூன்
- எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
- உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு.
தாளிக்க:
- எண்ணெய் – 3 டீஸ்பூன் க
- டுகு – சிறிதளவு
- பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
- கீறிய பச்சை மிளகாய் – 2.
அலங்கரிக்க:
- நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் – தலா ஒரு டீஸ்பூன்.
- பச்சைப்பயறு
செய்முறை:
- இஞ்சி, ப.மிளகாயை தனித்தனியாக விழுதாக அரைத்து கொள்ளவும்
- முளைகட்டிய பச்சைப்பயறு சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
- இதனுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்த பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு, சேர்த்து எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்).
- ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.
- தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி நன்கு குலுக்கிவிடவும்.
- நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த்துருவல் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.