எடிட்டர் சாய்ஸ்புதியவை

சுக்கிர வக்ர நிலை அடைவதால் கணவன் – மனைவி இடையே என்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? அலட்சியம் வேண்டாம்! எச்சரிக்கை

சுக்கிரன் வக்ர நிலை அடையும் காலத்தில் நம் குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதலில் நெருக்கம் எப்படி இருக்கும்.

சுகத்தை அளிக்கக்கூடிய சுக்ரன் வக்ரம் அடையும் நிலை காரணமாக பொதுவாக திருமண வாழ்க்கையில் சிறு சிக்கல்கள் வந்து செல்லும்.ஜூன் 25 வரை சுக்கிரன் வக்ர நிலை அடைந்து ரிஷப ராசியில் இருக்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் எப்படி என்பதை ராசிவாரியாக பார்ப்போம்.

மேஷம்

உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அல்லது துணைக்கு எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளனர். அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எளிதாக அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், முயற்சி செய்து பாருங்கள். உங்கள் அன்பை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள். இதன் மூலம் இருவரிடையே இருக்கும் தொடர்பில் இடைவெளி ஏற்படாதவாறு தவிர்க்கலாம்.

திருமணமாகாதவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசி தங்களின் உணர்வை வெளிப்படுத்துதலும், அவர்களின் உணர்வை புரிந்து கொள்ளுதலும் நன்று.ரிஷபம்

நீங்கள் உங்கள் துணை அல்லது விருப்பமானவருடன் தொலைவில் இருப்பின், அவர்களின் கவனத்தை ஈர்க்க பெரியளவில் கஷ்டப்பட வேண்டாம். அவர்கள் மீதான் காதலை வெளிப்படுத்த நாடகங்களை செய்வதற்கு பதிலாக, உங்களின் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொண்டு அவர்களுடன் உரையாடுவதால் நெருக்கம் அதிகரிக்கும்மிதுனம்

நீங்கள் பெரும்பாலும் உங்களின் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்படுவதில்லை என்பதை உணருங்கள். நீங்கள் கிடைக்காத பொருள் அல்லது விருப்பமானவரைப் பற்றி யோசிப்பதை அல்லது அவர்களை ஈர்க்க முயல்வதை விடுத்து, இருப்பதை வைத்து சந்தோசப்பட பாருங்கள். உங்களை விரும்பும் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினருடன் உறவை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

கடகம்

நீங்கள் உங்களுக்கு விருப்பமானவர் அல்லது துணையுடன் கொண்டிருக்கும் அன்பை அவர்கள் புரிந்து கொள்ளாமல், பாராட்டப்படாமலும் கவனிக்கப்படாமலும் இருந்திருக்கலாம். ஆனால் அதை நீங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விரைவில் உங்களை அவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.சிம்மம்

சிலர் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை அல்லது துணையுடனான நெருக்கம் குறித்து தவறான பார்வையுடன் அல்லது எதிரான கருத்துக்களை உங்களிடம் பேசலாம். அவர்களைப் பற்றியும், அவர்கள் கூறும் எதிர்மறை சிந்தனைகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது அப்படிப்பட்ட நபர்களை விட்டு விலகி இருப்பது. உங்களுக்கான சொந்த வாழ்க்கையில் மற்றவர் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி

நீங்கள் சிறிது காலமாக உங்கள் உறவில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளைச் சமன் செய்ய விரும்பி இருப்பீர்கள். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. காதலை சொல்லவும், குழந்தையை தத்து எடுத்தல் / பெற்றோரை சந்தித்தல், சமாதானப்படுத்துதல் போன்ற எண்ணத்தை நிறைவேற்ற தயாராகுங்கள். அதற்கான நேரத்திற்கு மன நிலையை தயாராக்குங்கள்.

துலாம்

உங்கள் யோசனைகளை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். அது தான் உங்கள் பணி இடத்திற்கு மட்டுமல்ல உங்கள் அன்பை பாதிக்கக்கூடிய விஷயமாக அமையும். உங்களின் துணை என்ன நினைக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் உறவில் இடையே யாரையும் அனுமதிக்காதீர்கள். உங்கள் சுற்றத்தார், உங்கள் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.விருட்சகம்

உங்கள் துணை அல்லது விருப்பமானவரை ஈர்த்து விட்டதாக நினைத்திருப்பீர்கள். ஆனால் அது எந்தளவு தவறு என்பதை உணர்வீர்கள். அதோடு நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு போதுமானதாக இல்லை, அவர்கள் மீது அக்கறை பெரிய அளவில் வைக்கவில்லை என்பதை உணருவீர்கள். இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான் கடினமான உறவாக இருந்தாலும், அவர்கள் மீது அன்பை அதிகமாக காட்டுங்கள். உங்கள் உறவின் இடையே மற்றவர்கள் எந்த அளவு வர ஒரு வரைமுறையை நிர்ணயிங்கள்.

தனுசு

சுக்கிரன் வக்ர நிலை அடையும் இந்த தருணத்தில். கடந்த காலத்தில் உங்களுக்கு ஒரு விருப்பமானவர் இருந்திருக்கலாம். ஆனால் இருவரிடையே சில கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கலாம். இந்த சுக்கிர வக்ர காலத்தில் இருவரிடையே ஒரு நெருக்கம் ஏற்படலாம். அல்லது அவர்களிடமிருந்து சில அழைப்புகள் வரலாம். ஆனால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடியுமா? இருவரிடையே நீண்ட தூரம் அன்பாக, காதலோடு பயணம் செய்ய முடியுமா என்பதை மனதில் வைத்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவும்.மகரம்

நீங்கள் ஒரு நிதர்சனவாதி. ஆனால் உங்களின் நிதர்சன பேச்சு செயல்பாடு உங்களின் உறவு, காதலுக்கு ஒத்துவராது. காகிதத்தில் நீங்கள் ஒரு தருணத்தை வரைந்து விட முடியும். ஆனால் நேரில் அதே போல் நடக்க சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். உங்களின் பேச்சு, செயல் உங்களின் துணையுடனான பிரிவில் மேலும் அதிகமாக்கலாம்.

கும்பம்

உங்களுக்கு புதிய உறவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உறவில் மிக சிறப்பாக அமையக் கூடிய தருணம் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் திருமணமாகாதவர் என்றால் நீங்கள் விரும்பும் நபருடன் பேசி பழக வாய்ப்பு உண்டு.. திருமணமானவர் என்றால் புதிய உறவு தேடிவந்தால், அதிலிருந்து தள்ளி நிற்கவும். உங்கள் துணையுடன் உங்கள் நெருக்கத்தை அதிகரித்து அவர்களுடன் தித்திப்படையுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker