ஆரோக்கியம்

முதல்முறை வொர்க் அவுட் செய்யும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

உடற்பயிற்சி செய்யும்போது தொடக்கத்தில், உடலிலும் சிந்தனையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

* எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சிக்ஸ்-பேக் வைக்க வேண்டும் என்பதற்காகவும் உடற்பயிற்சி செய்பவர்கள், ஓரே நாளில் பலன் கிடைத்து விடாது என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும், இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். மூளை உற்சாகமாக இயங்கும்.* தொடக்கத்திலேயே கடுமையான வொர்க்-அவுட்டுகளைச் செய்யக் கூடாது. தசைகளில் அழற்சியும், தசைநார்களில் பிரச்னையும் ஏற்படலாம். காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாத அளவுக்கு பலவீனமாக உணர்வார்கள். உடற்பயிற்சி செய்து முடித்ததும், சுமார் ஐந்து நிமிடங்கள் ஃபோம் ரோலரைப் (Foam Roller) பயன்படுத்தி தசைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

* கடுமையான வொர்க்-அவுட் செய்பவர்களுக்கு, உடலில் `கிரெலின்’ (Ghrelin) எனப்படும் பசிக்கான ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலைக்குச் செல்லலாம். இதனால் பசியின்மை ஏற்படும். டீஹைட்ரேசன் என்கிற நீர்வறட்சி நிலையும் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடற்பயிற்சி மூலம் மாதம் இரண்டு முதல் மூன்று கிலோவரை எடை குறைப்பதுதான் ஆரோக்கியமானது. ‘நேரம் கிடைக்கும்போது மட்டுமே ஜிம் செல்வேன்’ என்பவர்களுக்கும் இது பொருந்தும். அதற்கு மேல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், முறையான ஆலோசனை பெற்று அதற்குரிய பயிற்சிகளை எடுக்க வேண்டும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker