ஆரோக்கியம்மருத்துவம்
எதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்
தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு பழம் . 3
- நறுக்கிய கீரை – 1 கப்
- முட்டை கோஸ் – 100 கிராம்
- வெள்ளரிக்காய் – 1
- ஆப்பிள் – 1
செய்முறை
- முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி பிழிந்து ஜூஸாக்கி கொள்ளவும்.
- மிக்சியில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் கீரை, முட்டைக்கோஸை போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பின்னர் அதனுடன் ஆப்பிள், வெள்ளரிக்காயை கொட்டி மீண்டும் அரைக்கவும்.
- ஜூஸ் பதத்துக்கு வந்ததும் டம்ளரில் ஊற்றி ருசிக்கலாம்.
- இதில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் ஏ, சி,இ நிறைந்துள்ளது. இது சரும அழகுக்கும் தேவையானது.