எடிட்டர் சாய்ஸ்

இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்… உங்க ராசி என்ன?

காதல் மற்றும் பாசம் என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே பொதுவான உணர்வுதான். காதலை பொறுத்தவரை பெண்களை விட ஆண்கள் அதிக ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். பொதுவாக ஆண்களுக்கு காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் பிடித்தமான ஒன்றாகும். அனைத்து ஆண்களும் ஒரே மாதிரி காதலிப்பதில்லை.

சில ஆண்கள் மிகவும் மென்மையாக காதலிப்பார்கள், சில ஆண்களோ மிகவும் முரட்டுத்தனமாக காதலிப்பார்கள். அவர்கள் காதலிக்கும் விதம் மாறுபடுமே தவிர அவர்களின் காதல் மாறுவதில்லை. அனைத்து ஆண்களும் சிறப்பாக காதலித்தாலும் சில ஆண்கள் அதில் அதீதமாக இருப்பார்கள், அதற்கு அவர்களின் பிறந்த ராசி ஒரு முக்கிய காரணாமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் அதீத அன்புடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மகரம்மகரம்

மகர ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்திற்கு வேலை மற்றும் தொழிலுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக தோன்றலாம். ஆனால் உண்மையில் அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். காதலிலும், அன்பு செலுத்துவதிலும் இவர்கள் அதிக ஆர்வமுடையவர்கள். அதற்காகத்தான் அவர்கள் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தங்கள் காதலியை பாதுகாப்பதும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும்தான் தங்களின் முக்கிய கடமையாக நினைப்பார்கள். காதல்தான் தங்களின் வாழ்க்கையை முழுமைப்படுத்துவதாக இவர்கள் நம்புகிறார்கள்.

Cancer Zodiac Sign Characteristics and Personality Traits

கடகம்

கடக ராசி ஆண்களுக்கு காதல் மிகவும் முக்கியமானது, தாங்கள் செய்யும் அனைத்தையும் காதல்தான் சரியாக வடிவமைக்கிறது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் காதலியை எப்படி நடத்துகிறார்கள், அவர்களுக்காக என்ன தியாகம் செய்கிறார்கள் என்பதே இவர்களின் அளவற்ற காதலை வெளிப்படுத்தும். தங்களின் காதலி செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை வழங்கும். இவர்கள் காதலோடு செயல்படுவது மட்டுமல்லாமல், இவர்கள் செய்யும் அனைத்திலும் காதல் ஆதிக்கம் செலுத்தும். காதலின் வெளியே உலகை பார்ப்பது இவர்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்குகிறது.மீனம்

மீனம்

மீன ராசி ஆண்கள் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமின்றி, அவர்கள் விரும்புபவருடன் இருக்கும் நேரத்தைப் பாதுகாப்பதை உறுதிசெய்கிறார்கள். இவர்கள் தங்கள் காதலியுடன் தரமான நேரத்தை செலவழிக்க விரும்புகிறார்கள். அதனைப் பொறுத்துதான் இவர்களின் அன்றைய நாளும், செயல்பாடுகளும் இருக்கும். மீன ராசிக்காரர்கள் காதலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள், அதற்காக தங்களின் தேவைகளை ஒதுக்கி வைக்கவும் தயங்க மாட்டார்கள். இவர்களின் தன்னலமற்ற குணமும், காதலை ரசிக்கும் குணமும் இவர்களின் காதல் வாழ்க்கையை எளிதாக்குகிறது.

துலாம்

துலாம்

ராசிக்காரர்களின் முன்னுரிமைப் பட்டியலில் காதல்தான் எப்பொழுதும் முதல் இடத்தில் இருக்கும். அவர்கள் தங்களின் காதலை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதே இதனை அனைவருக்கும் உணர்த்தும். தங்களின் காதலியை கவனித்துக் கொள்வதையே கடமையாக நினைக்கும் இவர்கள் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைப் பற்றி அவர்களே கவனிக்காத விஷயங்களை இவர்கள் கவனிப்பார்கள். தங்கள் காதலில் ஏற்படும் சிறிய பிரச்சினைகள் ஒருபோதும் வளர்ந்து பெரிய பிரச்சினையாக மாற இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி ஆண்கள் காதலிக்கும் போது அவர்களின் காதலிதான் அவர்களுக்கு எல்லாமே. இவர்கள் அதிதீவிரமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் காதலிப்பார்கள். இவர்கள் காதலிக்க தங்கள் துணையின் ஒப்புதல் தேவையில்லை என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் அது எப்போதும் இவர்களின் நோக்கத்தை மாற்றாது. இவர்கள் தங்கள் காதலியின் வாழ்க்கையில் இணைந்து இந்த உலகத்திலேயே அவர்கள்தான் அதிக காதலிக்கப்படுபவர்கள் என்று உணர வைக்க விரும்புவார்கள். காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் அது தவறாக செல்லும்போது இவர்கள் உடைந்து போய்விடுவார்கள்.

 மேஷம்மேஷம்

மேஷ ராசி ஆண்கள் பல பெண்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் இவர்கள் சரியான பெண்ணை பார்க்கும்போது அதுதான் அவர்களின் இறுதி காதலாக இருக்கும். இவர்கள் காதலில் விழுந்தவுடன் இவர்கள் கவனம் முழுவதும் அவர்களின் காதலி மீதுதான் இருக்கும். இவர்கள் எப்போதும் கேள்வி கேட்பார்கள் அதற்கான பதிலை பெற எப்போதும் உண்மையான ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளியின் ஒழுக்கங்கள், கருத்துகள் மற்றும் தத்துவங்களை மதிக்கிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் அவர்கள் விரும்பும் விஷயங்களை தங்கள் கூட்டாளருடன் பகிர்ந்து கொள்ள விரும்புவார், ஆனால் அவர்களது காதலி அவர்களைப் போலவே இருக்க வேண்டுமென்று நினைக்க மாட்டார்கள். காதலில் எப்போதும் சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புடன் இருப்பார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker