சமையல் குறிப்புகள்

வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் ஷாவர்மா ரோல்

தேவையான பொருட்கள் :

 • எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் – 10
 • மைதா – 1 கப்
 • வெங்காயம் – 1
 • நறுக்கிய முட்டைகோஸ் – கால் கப்
 • மயோனீஸ் (முட்டை பாலேடு) – 1 கப்
 • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
 • எலுமிச்சைசாறு – 1 டீ ஸ்பூன்
 • சர்க்கரை – கால் டீஸ்பூன்
 • சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
 • கரம் மசாலா – அரை டீஸ்பூன்
 • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
 • தயிர் – 2 டீஸ்பூன்
 • எண்ணெய், உப்பு – தேவைக்கு
செய்முறை:

 • சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
 • வெங்காய்த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, தயிர், உப்பு ஆகியவற்றை கொட்டி அதனுடன் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
 • மற்றொரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
 • ஊற வைத்த சாப்பத்தி மாவை சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.
 • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிக்கன் துண்டு கலவையை கொட்டி சிக்கன் நன்றாக வேகும் வரை புரட்டி எடுத்துக்கொள்ளவும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிய துண்டுகளாக பிய்த்துக்கொள்ளவும்.
 • சுட்டெடுத்த ரொட்டி மீது மயோனீஸ் தடவி நடுவில் சிக்கன் துண்டு கலவையை வைக்கவும்.
 • பின்னர் அதன் மேல் வெங்காயம், முட்டைக்கோஸ் தூவி ரோலாக சுருட்டி ருசிக்கவும்.


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker