அழகு..அழகு..

உங்கள் நிறத்திற்கு எந்த கலர் லென்ஸ் பொருத்தமாக இருக்கும்

பெரும்பாலான பெண்கள் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதை விரும்புகிறார்களாம். ஆம் கண்களுக்கு கண்ணாடிக்கு பதிலாக இந்த லென்ஸை இப்பொழுது உபயோகப்படுத்துகிறார்கள். சில பெண்கள் இதை ட்ரெண்டுக்காக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் அவர்களின் வண்ணத்திற்கேட்ப லென்ஸ் அணிவதில்லை. அவர்களுக்காத்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள்.கான்டாக்ட் லென்சை நீங்கள் பல விதங்களில் அணியலாம். அது உங்கள் முகத்திற்கு அழகை கூட்டிக் கண்ணபிப்பது மட்டுமில்லாமல், உங்களுடைய தோற்றத்தையும் சற்று வேறு மாதிரி காண்பிக்கும். சரி என்ன விதமான லென்சுகள் அணிந்தால் உங்கள் வண்ணத்திற்கு சரியாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.

முதல் உங்களுடைய சருமம் என்ன நிறத்தில் உள்ளது என்பதை நீங்கள் தீர்மானிக்கவேண்டும். கருப்பு நிற சருமம், மாநிற சருமம் மற்றும் வெண்மை நிற சருமம் என மூன்று வகைகள் உள்ளது. அதற்கு தகுந்தமாதிரி நீங்கள் காண்டாக்ட் லென்சை அணிந்து கொள்ளலாம்.

கருப்பு நிற சருமத்திற்கு:உங்கள் நிறம் கருப்பாகவோ, இல்லையென்றால் ஆழமான கருமை நிறம் கொண்டிருந்தால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்கு நிறைய வண்ண லென்சுகள் உள்ளது. டூ டான் வயலட், பிரவுன் கலர் மற்றும் ஹெசல் போன்ற வண்ண காண்டாக்ட் லென்ஸ்களை நீங்கள் அணியலாம். இது உங்கள் கண்களுக்கு கவர்ச்சியாகவும், ஈர்க்கும் நிறத்தையும் தர வல்லது. மற்றவர்கள் கவனம் உங்கள் பக்கம் திரும்ப வேண்டுமா? அப்பொழுது இந்த வண்ண லென்ஸை நீங்கள் உபயோகிக்கலாம். கிரே வண்ணம், இளம் பச்சை மற்றும் பழுப்பு போன்ற வண்ணங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது உங்களை எடுப்பாக காண்பிக்கும். இளம் சிவப்பு மற்றும் அக்வா போன்ற நிறங்கள் உங்களுக்கு மிகுந்த டார்க்காக இருக்கும். அதனால் அதை தவிர்ப்பது நல்லது.

மாநிற சருமத்திற்கு:

மாநிற சருமம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அடர்த்தியான நிற காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தலாம். ஹனி, டார்க் ப்ளூ மற்றும் கிரே போன்ற வண்ணங்களை நீங்கள் பயன்படுத்தலாம். இது உங்கள் கண்களின் வண்ணங்களை இயற்கையாக இருப்பது போல் காண்பிக்கும். இந்த வண்ணங்கள் அணிந்தால் உங்கள் கண்கள் சற்றே நிறம் மாறி காண்பிக்கும்.

வெள்ளை நிற சருமத்திற்கு:

வெள்ளை நிறம் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை நீங்கள் எந்த வித நிற லென்ஸ் வேண்டுமானலும் பயன்படுத்தலாம். உங்கள் கண்களை கவர்ச்சியாகவும், அழகாகவும் காண்பிக்க ஊதா, மெருன் மற்றும் பச்சை வண்ண லென்சுகள் பொருத்தமாக இருக்கும். நீங்கள் மேக்கப் செய்து பார்க்கும் பொழுது உங்கள் கண்கள் இன்னும் அழகாக காட்சியளிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker