சமையல் குறிப்புகள்

தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம்

தேவையான பொருட்கள் :

  • பனங்கிழங்கு – 4
  • தேங்காய்ப்பால் – ஒரு கப்
  • பனை வெல்லக் கரைசல் – அரை கப்
  • ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
  • நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – தேவையான அளவு
  • நெய் – ஒரு ஸ்பூன்.




செய்முறை:

  • பனங்கிழங்கை முழுதாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெளியில் உள்ள தோல் பகுதியையும், உள்ளே உள்ள தண்டு பகுதியையும் நீக்கி விட வேண்டும். இதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் நெய்யை சேர்த்து சூடானதும் பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடிபிடிக்காதவாறு 3 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்க வேண்டும்.
  • அதனுடன் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதித்து வரும் போது இறக்கிக் கொள்ளலாம்.
  • கொஞ்சம் சூடு தணிந்த பின்பு தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலக்கி பரிமாறவும்.
  • தித்திப்பான பனங்கிழங்கு பாயாசம் ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker