அழகு..அழகு..

நீங்கள் அறியாமல் செய்யக்கூடிய சில மேக்கப் தவறுகள்

பெண்கள் கல்யாணம், விழா காலம் என்று வரும் நாட்களில் ஒப்பனை செய்து கொள்ளும் போது அதில் செய்யக்கூடிய சில தவறுகள் (mistakes)உள்ளது. நீங்கள் மேக்கப்பில் எக்ஸ்பெர்ட் ஆக இருந்தாலும் சரி இதை நாம் எல்லோரும் செய்து கொண்டு தான் இருக்கிறோம், அறியாமல் புரியாமல் செய்துகொண்டுதான் இருக்கப்போறோம்! இதை பற்றி தெரிந்து கொண்டு, உங்கள் ஒப்பனையை இன்னும் சிறப்பாக அமைத்து நீங்கள் இன்னும் நன்றாக தெரியலாம்!

பெரும்பாலும் நாம் நம் முகத்தில் ஏற்படும் அந்த எண்ணெய் பசை கொண்ட அழுக்கான தோற்றத்தை நினைத்து பயப்படுவது உண்டு. இதற்கு தட்ப வெப்பமே காரணம்! அதனால் நாம் நம் வயதிற்கும் மேல் நம்மளை காட்டக்கூடிய ஒரு மேட் பாவுண்டேஷன் மற்றும் செட்டிங் பவுடர்களுக்கு செல்கிறோம். இது உங்கள் முகத்தில் ஒப்பனை சரியாக அமையாத (கேக்கி) ஒரு தோற்றத்தை அளிக்கும். அதனால், கனமான காம்பெக்ட்களை விட்டுவிட்டு, ஷீர் போவுண்டஷன், ஈரத்தன்மை கொண்ட ஹயிலைட்டர்ஸ் மற்றும் பிபி கிரீம்களுக்கு மாறுவது நல்லது. ஏனெனில், உங்கள் சருமம் இயல்பாகவே பனித்துளிகள் போல ஈரப்பதத்துடன் இருக்கும், மேட் அல்ல. இதை நீங்கள் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். .நாம் பார்க்கும் பார்வையில் மாயத்தை உண்டாகும் இந்த பென்சிலுடன் (காஜல்) நாம் அனைவரும் ஒரு உண்மையான உறவை வைத்திருப்போம்! அனால் அதற்காக அதை மிகவும் அழுத்தி தடிமனாக பூசவேண்டாம். எனில் அது சிலருக்கு நன்றாக அமைவதில்லை. ஒரு மிதமான கோடு வரைவது உங்களை இன்னும் அழகாக காட்டும். மேலும், அதை ஸ்மாட்ஜ் செய்து ஒரு ஸ்மோகி தோற்றத்தையும் குடுக்கலாம்!

பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கருவளையம் இன்னும் அதிகமாக தெரிய காரணமே இந்த கண் மை தான். அதை நீங்கள் படுக்கும் முன் சுத்தமாக அகற்றி விட வேண்டும். அடுத்த நாள் மீண்டும் அதை மிதமாக பூசுங்கள். அல்லது ஒரு பழுப்பு நிற பென்சிலில் உங்கள் கீழ் கண்களை ஸ்மட்ஜ் செய்தால் அது உங்கள் கண்களை இன்னும் பெரிதாக விழித்தது போல காண்பிக்கும்.

பெண்களே .. தன்னுடைய நிறத்திற்கும் மாறாக ஒரு படி இலகுவான நிறத்தில் பாவுண்டேஷனை தேர்தெடுப்பதினால் அது உங்களை வெள்ளையாக காட்டாது! இது உங்கள் சருமத்தை இன்னும் ஒரு சாம்பல் நிறத்தில் ( க்ரே) காட்டும். ஆகையால், பாவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் மணிக்கட்டு இடத்தில் தடவாமல், உங்கள் தாடை பகுதிகளில் தடவி போதிய வெளிச்சத்தில் டெஸ்ட் செய்யுங்கள். அதுவே உங்கள் உண்மையான நிறத்திற்கு ஏற்ற பாவுண்டேஷனை காட்ட உதவும்.

உங்கள் புருவங்கள் நிச்சயம் உங்கள் முகத்தின் தோற்றத்தையே மாற்றிவிடும் என்பதுதான் நிஜம்! ஆகையால், புருவங்கள் மெல்லியதாக இருந்தால் அதை ஐ ப்ரோ பென்சிலை வைத்து சரி செய்யுங்கள். ஏனெனில், மெல்லிய புருவங்கள் உங்களை வயதானவர் போலவும் அடர்த்தியான ப்ரோ உங்களை இளமையாகவும் காட்டும்.மிகைப்படுத்திய ஒப்பனையை தவிர்க்க பிங்க் ப்ளஷ்ஷை பிங்க் லிப்ஸ்டிக் உடன் பூசுங்கள், ஆரஞ்சு லிப்ஸ்டிக் உடன் பீச் ப்ளஷ், ரெட் லிப்ஸ்டிக் உடன் பெர்ரி ப்ளஷ் மற்றும் பீச் லிப்ஸ்டிக்கை ஒரு நூற்றல் பீச் ப்ளஷுடன் பொருத்தமிட்டு அணியுங்கள். இது ஒரு மிக முக்கியமான ஒப்பனை விதி. எக்காரணத்திற்கும் இதை தவற விடாதீர்கள்.

காரியங்களை போல், இந்தியர்கள் தன் சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது இல்லை! அதனால், உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், அதை முதலில் நீங்கள் ஒரு நல்ல மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தி மேன்மை ஆக்குவது முக்கியம். சருமத்தில் ஈரப்பதம் மிக அவசியம். இல்லாவிட்டால், உங்கள் சருமத்தில் எந்த மேக்கப்பும் படியாத (கேகி) தோற்றத்தை அளிக்க வாய்ப்புள்ளது.

பல பெண்கள் படுக்கும் முன் ஒப்பனையை சோம்பலின் காரணமாக சுத்தம் செய்ய வெறுப்பார்கள். அனால் இது உங்கள் துளிகளை அடைத்து பருக்கள் மற்றும் ஆக்னே உண்டாக வாய்ப்புள்ளது. அதனால், படுக்கும் முன் ஒரு வைப்ஸ்ஸை வைத்து உங்கள் ஒப்பனையை சுத்தமாக தொடைக்கவும். அதற்கு பிறகு ஒரு கிளென்சர் பயன்படுத்தி முகத்தை கழுவி மாய்ஸ்சுரைசரை பூசுங்கள். இதை பகலில் மற்றும் இரவில் பின்பற்றுங்கள்.

உங்கள் மேக்கப் பிரஷை கழுவுவது அவசியம். இல்லையென்றால் எல்லா பொருட்களிலும் அடுத்து அடுத்து பயன்படுத்துவதினால் அதில் அழுக்கு, எண்ணெய் மற்றும் தூசி சேர்ந்துவிடும். மேலும் இது உங்கள் சருமத்தை பாதித்து அரிப்பு உண்டாக்கும். எனவே உங்கள் பியூட்டி ப்ளெண்டர் மற்றும் மேக்கப் பிரஷை கழுவுவது அவசியம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker