சமையல் குறிப்புகள்

சத்தான காலை உணவு கேரட் சாண்ட்விச்

தேவையான பொருட்கள் :

 • கோதுமை பிரெட் ஸ்லைஸ் – 10,
 • கேரட் (துருவியது) – 1 கப்,
 • சீஸ் (துருவியது) – அரை கப்,
 • வெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
 • பூண்டு – 3 பல்,
 • மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
 • உப்பு – சிட்டிகை.
செய்முறை:

 • பிரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.
 • பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.
 • வெண்ணெயை அடுப்பில் வைத்து உருக்கி, அதில் நசுக்கிய பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.
 • ஐந்து நிமிடங்கள் வதக்கியபின் இறக்கி சீஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
 • ஒரு பிரெட் ஸ்லைஸின்மேல், இந்தக் கலவையில் சிறிதளவைத் தூவி, மற்றொரு ஸ்லைஸால் மூடவும்.
 • வெண்ணெய் தடவி, டோஸ்டரில் ரோஸ்ட் செய்யுங்கள். அல்லது, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள்.
 • சூப்பரான சத்தான கேரட் சாண்ட்விச் ரெடி.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker