அழகு..அழகு..

சருமத்தை பாதுகாக்க கண்டிப்பாக இதை செய்யாதீங்க

சமூக வலைத்தளத்தில் சருமத்தை பாதுகாக்க பயனுள்ள குறிப்புகள் பலவும் வலம் வந்தபடி இருப்பது வழக்கமான விஷயம் தான். அதேபோல் அழகை பராமரிக்க ஆசைப்படும் பெண்கள், நான் என்ன செய்ய வேண்டுமென மட்டும் தான் கேட்கிறார்களே தவிர, என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்ள விரும்பவில்லை. அதைப்பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

1. உங்கள் சருமத்தில் பருக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக அமைவது நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் தான். காரணம், டூத் பேஸ்ட்டில் இருக்கும் கெமிக்கல் தான். இதனால் சருமத்திலிருக்கும் Ph அளவு மாற்றம் நிரம்ப காணப்பட, உங்கள் சருமம் வறண்டு காணப்படும். எனவே, டூத் பேஸ்ட் தேர்வில் நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.2. சர்க்கரை மற்றும் சமையல் சோடா கலந்த முக கிரீம்கள் சருமத்தின் வெளிப்புற பரப்பு பாதிக்கப்பட, சிராய்ப்புகளும் ஏற்படக்கூடும். நீங்கள் சரியாக பயன்படுத்தாதபோது பல்வேறு பிரச்சனைகளும் இதனால் வரக்கூடும். நீங்கள் இந்த கிரீம்களை கண்களுக்கு கீழ்ப்புறத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உங்கள் சருமம் மிகவும் உணர்ச்சி கொண்டதாக இருக்குமெனில் சிறிய காயங்கள் கூட ஏற்படலாம்.

3. உங்கள் சருமத்தில் பருக்கள் இருக்குமெனில் மிகவும் அதிக பவர் கொண்ட ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் இந்த ஆப்பிள் சிடர் வினிகரை நேரடியாக சருமத்தில் தடவினால் சருமம் எரிச்சலுடன் காணப்படும். அதேபோல் நீர்த்து போன ஆப்பிள் சிடர் வினிகரை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

4. சன் ஸ்கிரீமை நீங்கள் சருமத்தில் தடவுவதால் சூரிய கதிர்கள் பட்டு உங்கள் சருமத்தில் பலவித பாதிப்பை ஏற்படுத்தும்.

5. நீங்கள் முகத்தில் பயன்படுத்தும் கோந்து போன்ற மாஸ்க், சருமத்தின் தோள்களை உரிய செய்ய, வெடிப்புகளும் ஏற்படக்கூடும். மேலும் இது, உங்கள் சருமத்தில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்துகிறது.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker