சமையல் குறிப்புகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் மீன் கபாப்

தேவையான பொருட்கள் :

 • துண்டு மீன் – அரை கிலோ
 • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
 • வெங்காயம் – 1
 • வினிகர் – 2 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
 • சோள மாவு – 2 டீஸ்பூன்
 • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :

 • வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
 • மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.
 • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.
 • பின்பு அதில் உள்ள சதைப் பகுதியை மட்டும் மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
 • அருமையான மீன் கபாப் ரெடி.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker