ஃபேஷன்

புத்துணர்ச்சியூட்டும் புதுரக சேலைகள்…

ஜவுளிக்கடைகளில் நுழைந்தவுடன் பெண்கள் கேட்கும் முதல் கேள்வி புதிதாக ஏதாவது புடவைகள் வந்திருக்கிறதா?

* டஸ்ஸர் பட்டில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வந்திருக்கும் சேலைகளில் ஜரிகையானது சில்வர் மற்றும் கோல்டன் நிறங்களில் அட்டகாசமாக வந்துள்ளன. இவ்வகை சேலைகள் குறைந்த எடையுடன் அணிந்து கொள்ள ஏதுவாக உள்ளன. பல வித கண்கவர் வண்ணங்களில் அருமையான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வந்திருக்கும் இவ்வகை சேலைகள் மிகவும் நேர்த்தியான தோற்றத்தை தருபவையாக உள்ளன.

* மென்மையான காட்டனில் ஜெய்ப்பூர் பிரிண்ட்டட் சேலைகள் இவை அணிவதற்கு மிகவும் மென்மையாகவும், அதிலிருக்கும் பிரிண்டானது வித்தியாசமாகவும், அழகாகவும், அணிபவருக்கு கம்பீரத் தோற்றத்தைத் தருபவையாகவும் உள்ளன. இந்தச் சேலைகளை கஞ்சி போட்டு இஸ்திரி செய்ய வேண்டிய அவசியமில்லை. இவை மல் மல் சேலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பத்திக், இக்கத், செக்டு, முத்ராஸ் கலம்காரி, சிகோரி பிரிண்டுகளில் கான்ட்ராஸ்ட் பார்டர் மற்றும் பல்லுவுடன் வந்திருக்கும் சேலைகளில் எதைப் பார்த்தாலும் வாங்கத் தோன்றுகின்றது. வேலைக்குச் செல்பவர்களின் விருப்பத் தேர்வாக இந்தப்புடவைகள் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.* தூய காஞ்சிபுரம் சில்க்காட்டன் சேலைகளிலும் ஏகப்பட்ட கலெக்‌ஷன்கள் வந்துள்ளன. ஒரே நிறத்தில் கோல்டன் ஜரிகையில் சூரியகாந்தி பூ புட்டாக்கள், இரண்டு விரல் அகலத்திற்கு ஜரிகை பார்டர்களுடன் வந்திருக்கும் சேலைகளில் சிவப்பு, கற்பக பச்சை, கிளிப்பச்சை நிறங்கள் சிலிர்ப்பூட்டுகின்றன. முந்தியில் அதிகமான புட்டாக்களுடன் பவஞ்சி பார்டர்களுடன் காட்சியளிக்கும் இவை அருமையோ அருமை என்று சொல்லலாம். உடல், பார்டர், பல்லு இவை அனைத்தும் வேறு வேறுக் கான்ட்ராஸ்ட் நிறங்களில் இருக்க மூன்று பகுதி பார்டர்களைக் கொண்டிருக்கும் சேலைகளின் அழகை என்னவென்று சொல்வது. டபுள் ஷேட்களிலும் இவ்வகை சேலைகள் கிடைக்கின்றன.

* எளிமையான பல்லுவுடன் பெரிய அழகழகான பார்டர்களுடன் வந்திருப்பவை செமி ஆராபட்டு புடவைகள், புடவையின் மேற்புறம் சிறிய கோபுர பார்டர், கீழ்ப்புறம் பெரிய கோபுர பார்டருடன் மயில், பூக்கள், யானைகள் என ஜரிகை பார்டருடன் கான்ட்ராஸ்டான வண்ணங்களில் வந்திருக்கும் இந்தச் சேலைகள் அனைத்து விழாக்களுக்கும் அணிய ஏற்றவை. அடர்ந்த சிவப்பு நிறத்திற்கு பச்சை, அடர் நீலத்திற்கு மஜந்தா பீச் நிறத்திற்கு மெரூன், மாம்பழ மஞ்சளுக்கு சிவப்பு, பச்சை நிறத்திற்கு நீல பார்டகளுடன் பிளவுஸ் துணிகளும் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

* க்ரேப் சில்க் சேலைகள் என்றாலே குளிர்ச்சியான எண்ணம்தான் தோன்றும். உடல் முழுவதும் புட்டாக்கள், பூக்கள் என்று அழகான நிறங்களில் வந்திருக்கும் இந்தச் சேலைகளில் பிளவுஸ் துணியானது இணைக்கப் பட்டுள்ளது. இவற்றை வீட்டிலேயே துவைத்து, இஸ்திரி போடாமல் அணியலாம்.

* பனராஸ் சேலைகளில் ஜரி வேலைப்பாடுகள், நூல் வேலைப்பாடுகள், ப்பர் நெட் சில்வர் சேலைகள், பனாரஸில் பெரிய பார்டர் மற்றும் உடலில் பிரிண்ட் செய்யப்பட்ட சேலைகள், ப்ராஸோ சேலைகள், பேட்ச் வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரிஜினல் ப்ராஸோ சேலைகள் இவை அனைத்துமே புது வரவுகளாகும்.* ப்யுர் சில்க் ஜக்கார்டு சேலைகளில் பல்லுவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு வந்திருப்பவை அழகோ அழகு என்று சொல்லலாம். ஜக்கார்டு பார்டரில் நூல் எம்பிராய்டரி அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

* லினென் மற்றும் செமி லினென் சேலைகளிலும் புது ரகங்கள், டிசைன்கள் வந்துள்ளன. பெரிய பூக்களுடன் மென்மையான வண்ணங்களில் வந்திருக்கும் இவை அணிந்தால் ரிச்சான தோற்றத்தை தரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். செமி ராசில்க் சேலைகளில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வந்திருப்பவையும் புதுவரவே.

* பார்டர் ஓரங்களில் பாம் பாம் தைக்கப்பட்டு வந்திருப்பவை புதுமையாக உள்ளன. ஜுட் சில்க் சேலைகளிலும் ஏகப்பட்ட கலெக்‌ஷன்கள் வந்துள்ளன. சானா சில்க் சேலைகளில் இணைக்கப்பட்டு வரும் பிளவுஸ் துணிகளில் முன்புறம், பின்புறம் மற்றும் கைகளில் டிசைன் செய்யப்பட்டு வந்திருக்கும் சேலைகளை பிளவுஸிற்காகவே வாங்கத்தோன்றும். பல வகையான வடிவமைப்புடன் அனைவரும் வாங்கத் தோன்றும் வகையில் வந்திருப்பவை இவை என்றால் மிகையாகாது.

* டிஷ்யூ மெட்டீரியலில் கோல்டன் பார்டர் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வந்திருக்கும் சேலைகள் விழாக்களுக்கு அணிந்துசெல்ல உகந்ததாக பளபள தோற்றத்துடன் வந்துள்ளன.

* கோரா மஸ்லின், சேட்டின் சேலைகளில் எம்பிராய்டரி வேலைப்பாடுடன் வரும் இவ்வகை சேலைகள் ஷைனிங்காகவும், பார்வைக்கு பகட்டாகவும் மிகவும் அழகாக உள்ளன. எம்போஸிங் டஸ்ஸர் சேலைகளும் அருமையாக வந்திருக்கின்றன.

* பார்டரில் சிறிய பிரில் வைத்து வந்திருக்கும் சேலைகளும் புது வரவே. பிரில்லானது பார்டரின் மேல்புறம் இணைக்கப்பட்டு வந்திருப்பது புதுமையாக உள்ளது.

* கோட்டா சேலைகளில், சேட்டின் பார்டர்களில் டிஜிட்டல் பிரிண்ட் இவை அணிந்து கொள்ள மிகவும் வசதியாகவும், கூலாகவும் இருக்கும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker