ஆரோக்கியம்

இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது

உலகில் இதுவரை கலப்படம் செய்யப்படாத ஒரு பொருள் என்றால் அது இளநீர்தான். இது உடனடி ஆற்றலை வழங்கும் பானமாகவும் இருக்கிறது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் இயற்கையான என்சைம்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது இளநீரை குடிப்பதற்கென குறிப்பிட்ட நேரம் எதுவுமில்லை. பகல் பொழுதில் இளநீரை எப்பொழுது வேண்டுமென்றாலும் குடிக்கலாம் ஆனால் அதனை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாகும். அப்படி எந்த நேரத்தில் இளநீர் குடித்தால், அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

காலை நேரம் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவும். மேலும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.



விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த பானமாகும். உடற்பயிற்சிக்கு முன்னர் இளநீர் குடிப்பது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுகிறது. உடற்பயிற்சிக்கு பின்னர் இளநீர் குடிப்பது தீவிர உடற்பயிற்சியால் இழந்த எலெக்ட்ரோலைட்டுகளின் இழப்பை சமன் செய்கிறது. இளநீர் குடிப்பது சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சிறந்த ஆற்றல் அதிகரிக்கும் பானங்களில் ஒன்றாகும். உணவுக்கு முன் புத்துணர்ச்சியூட்டும் இளநீரைக் குடிப்பது, உங்கள் உணவை முழுமையாக்குகிறது, இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது கலோரிகளில் குறைவாக இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது.

உணவுக்கு பின் இதனைக் குடிப்பது வயிற்றில் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதய துடிப்பை குறைக்க உதவுகிறது. தூங்க செல்வதற்கு முன் சிறிது இளநீர் குடிப்பது மனஅழுத்தத்தை குறைக்கவும், மன அமைதியை ஏற்படுத்தவும் உதவுகிறது. தூங்கும் முன்னர் இளநீர் குடிப்பது உடலில் இருக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்றவும், உங்கள் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவும். இது உங்களை நோய்த்தொற்றில் இருந்தும், சிறுநீரக பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker