முகப்பரு எதனால் வருகிறது- தடுக்கும் வழிமுறைகள்
தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது. பொதுவாக ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கக்கூடியது. இது வாலிப வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் போது துவங்குகிறது.
காரணங்கள்:
\
1. எண்ணெய்ச் சுரப்பி (மெழுகு சுரப்பி)களில் ஏற்படும் அடைப்பு, சுரப்பி பெரிதாதல், எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, இறந்த தோல் செல்கள், சூழ்நிலையால் அசுத்தங்கள்,
2. நுண்கிருமி தாக்கம் : “புரோப்யோளி பாக்டீரியம் ஆக்னே” இதன் தாக்கம் காரணமாக பருக்களில் சுழற்சி ஏற்பட்டு, சிவந்து, சீழ்பிடிக்க வகை செய்கிறது. மேலும் இதனால் பருக்கள், முகத்தில் கரும்புள்ளி போன்றவை ஏற்படுகிறது.
3. காரணிகள்:
1. மரபு வழி (குடும்ப வழி)
2. ஹார்மோன் மாற்றம்,
3. மாதவிடாய் சுழற்சி,
4. தோல் சுழற்சி,
5. மன அழுத்தம்,
6. சில வகை மருந்துகள்,
7. இரசாயன சேர்மங்கள்,
8. உணவு பழக்க முறை அதிக சர்க்கரை உணவுகள், அதிகப்படியான கொழுப்பு சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்கள்,
9. பால் பொருட்கள்,
10. புகை பிடித்தல்,
11. கர்ப்ப காலம்,
12. சார்பு நிலை நோய்கள், உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டி, நாளமில்லா சுரப்பி நோய்கள்.
சிகிச்சை முறைகள் : சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள், ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை உண்டு பண்ணக் கூடியது.
எந்தவொரு சிகிச்சையும் பலனளிக்க குறைந்த பட்சம் 2, 3 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும் பருக்கள் மீண்டும் வராமலிருக்க தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பருக்களை கிள்ள கூடாது. தேவைக்கு அதிகமாக முகத்தில் கிரீம் போடக்கூடாது. அதிக இனிப்பு, கொழுப்பு உள்ள தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ கூடாது.
தரமான சோப் கொண்டு இரண்டு முறை முகம் கழுவலாம். சிகிச்சை முறைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாற்றவோ, நிறுத்தவோ கூடாது.