முதுகுவலியை போக்கும் பயிற்சிகள்
* தரையில் படுத்துக்கொண்டு மூட்டுப்பகுதியை மடக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் மூட்டு மீது கையை வைத்து மார்பு வரை மூட்டுப்பகுதியை அங்கும் இங்கும் நகர்த்த வேண்டும். இந்த பயிற்சி முதுகு தசைகளுக்கு இதமளிக்கும். முதுகு பகுதியில் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்தும். அவ்வாறு 10-15 முறை செய்து வரலாம். அவ்வாறு செய்துவந்தால் முதுகுவலி வராமல் தவிர்க்கலாம்.
* தரையில் மூட்டுப்பகுதியை மடக்கி அமர வேண்டும். தலைப்பகுதி தரையில் படுமாறு குனிந்து இரு கைகளையும் தலையையொட்டி நீட்ட வேண்டும். சிறிது நேரம் கழித்து இருகைகளையும் கால்பகுதிக்கு பின்புறமாக நீட்டவேண்டும். இந்த பயிற்சி இடுப்பு, தொடை, கணுக்கால் பகுதிகளை பலப்படுத்தும். முதுகுவலி மட்டுமின்றி கழுத்துவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். மன அழுத்தம் மற்றும் சோர்வில் இருந்தும் விடுபடலாம்.
* கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு கைகளை தரையில் ஊற்றி இடுப்பை வளைத்து நேராக தலையை நிமிர்த்த வேண்டும். இந்த பயிற்சி இடுப்பு தசைகளுக்கு நெகிழ்வு கொடுக்கும். முதுகுவலி குறைய தொடங்கும்.
* தரையில் அமர்ந்து கொண்டு ஒரு காலை மற்றொரு காலின் தொடைப்பகுதிக்கு அருகில் வைத்துக்கொண்டு இடுப்பை அங்கும், இங்கும் அசைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். அமர்ந்த நிலையிலேயே முதுகை திருப்பும்போது நெகிழ்வு தன்மை அதிகரிக்கும். முழங்கால்கள், தோள்பட்டை, முதுகெலும்புகள் வலுப்படும்.
* தரையில் படுத்துக்கொண்டு முதுகு பகுதியை மட்டும் மேல்நோக்கி தூக்கி பயிற்சி செய்யலாம். இது முதுகு மண்டலத்தை பலப் படுத்தும். உட்கார்ந்த நிலையில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பயிற்சி பலன் கொடுக்கும். முதுகுவலி பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.