ஆரோக்கியம்புதியவை

சம்மணமிட்டு உணவருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன…?

நாம் உண்ணும் உணவு முழுமையாகச் செரிமானமாக சம்மணமிட்டு உணவருந்தும் முறையே சிறந்தது. கீழே அமர்ந்து நமக்கு முன்னே இருக்கும் உணவைக் குனிந்து நிமிர்ந்து எடுத்துச் சாப்பிடும்போது, வயிற்றுத் தசைகளுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்;  செரிமானச் சுரப்பிகளும் தூண்டப்படும்.
சம்மணமிட்டு உணவருந்துவதால் ‘பசி அடங்கிவிட்டது’ என்ற உணர்வை மூளைக்குக் கடத்தும் நரம்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதுவே நாற்காலியில் அமர்ந்து உணவருந்தினால், அந்த உணர்வு உடனடியாக மூளைக்குக் கடத்தப்படாமல், கூடுதல் நேரத்தை  எடுத்துக்கொள்ளும். இதனால் அதிக உணவு சாப்பிட நேரிடும்.
தேவைப்படும் கலோரிகளைவிட, அதிக கலோரிகள் உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும். எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஆசைப்படுபவர்கள் சம்மணமிட்டு உணவருந்தும் பழக்கத்தை முதலில் பின்பற்ற வேண்டும்.
கால்களை மடக்கி, தொடைப் பகுதியில் வைத்துக்கொள்ளும் ஆசன வகையான ’பத்மாசனத்தில்’ கிடைக்கும் பலன்களில் பாதி, சம்மணம்  எனும் ‘சுகாசனத்தின்’ மூலம் கிடைக்கும். மேலும், உடல் உறுதிபெறுவதோடு, மூட்டு சார்ந்த நோய்கள் ஏற்படாது.
சம்மணமிடுவதால், இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளுக்கு வலிமை கிடைப்பதுடன் இடுப்பு இணைப்புகளில் நெகிழ்வுத் தன்மை ஏற்படும். நாற்காலியில் கூனிக் குறுகி அமர்வதைப் போல இல்லாமல், தரையில் சம்மணமிட்டு நிமிர்ந்து அமரும்போது, உடலுக்கு நிலையான தன்மை  உண்டாகும்.
களைப்பு நீங்கி சுறுசுறுப்புடன் உடல் இயங்க, சம்மணம் வழிவகுக்கும். உடலின் மேல் பகுதிக்கு ரத்தம் அதிகமாகப் பாயும். குருதியின் சுற்றோட்டத்தை அதிகரித்து, பல்வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். மனதை அமைதிப்படுத்தவும் ஒருநிலைப்படுத்தவும் சம்மணமிடும்  முறை உதவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker