சமையல் குறிப்புகள்
கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா
தேவையான பொருள்கள் :
- கோதுமை மாவு – அரை கப்
- ராகி மாவு – அரை கப்
- உப்பு – தேவையான அளவு
ஸ்டஃப்பிங்க்கு…
- உருளைக்கிழங்கு – 1
- கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன்
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- ஒமம் – கால் ஸ்பூன்
செய்முறை :
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.
- உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
- மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும்.
- மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும்.
- தோசைக் கல்லை அடுப்பில் வைத்து பரோட்டாவை சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- சுவையான கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா ரெடி.