தேனின் மிக முக்கியமான நன்மைகள் பற்றி தெரியுமா?
மலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன் இருக்கிறது . தேனீ இந்த தேனை தன் வயிற்றில் உள்ள பையில் நிரப்பி தேன் கூட்டில் சேமித்து வைக்கிறது . மகரந்தத் தேனில் 50% தேன் இருக்கிறது .தேனீ அந்த நீரை தன் இறக்கைகளால் விசிறி தன் வயிற்றில் இருந்து சுரக்கும் அமிலத்துடன் கலந்து தேனை நீண்ட காலங்களுக்குக் கெடாத தன்மையுடையதாக மாற்றி சேகரிக்கிறது.
தேனில் குளுக்கோஸ், ஃப்ருக்டோஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அத்துடன் இரும்புச்சத்து, கால்சியம், போஸ்பேட், க்ளோரின், பொட்டாசியம், மக்னீசியம்,விட்டமின், பி1,பி2,பி3 ,பி5 மற்றும் பி6 இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும்.
தேனின் தன்மை
தேன் இயற்கையாகவே அமிலத்தன்மை உடையது . இது சுமார் 3 – 4.5 வரை பி.ஹெச்(pH) அளவு உள்ளது. அந்த அமிலம் அங்கு வளர விரும்பும் எந்த நுண்ணுயிரையும் கொன்றுவிடும். தேன் அதன் இயற்கை வடிவத்தில் மிகவும் குறைந்த ஈரப்பதம் உடையது. மிக சில பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் இதுபோன்ற சூழலில் வாழ முடியும். அவையும் எளிதில் இறந்துவிடும்.
தேனின் மருத்துவ குணங்கள்
- குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.
- தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.
- தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.
- ரத்தப் பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றிலிருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கம்.
- நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.
- தேன் சாப்பிட்டால் இந்த நோய்கள் வராது
- கொலஸ்ட்ரால், இதயநோய், மூட்டுவலி, ஜலதோஷம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.