சமையல் குறிப்புகள்
இட்லிக்கு அருமையான கொத்தமல்லி துவையல்
காலையில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடுங்கள். இது சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- கொத்தமல்லி – 1 கட்டு
- புளி – நெல்லிக்காய் அளவு
- கடலைப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் – 4
- துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
- எண்ணெய் – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- கொத்தமல்லியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின்னர் அதில் தேங்காய் சேர்த்து வதக்கி, பின் புளி சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.
- பின்பு அதில் கொத்தமல்லியை போட்டு 2 நிமிடம் வதக்கிய, பின்னர் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
- அனைத்து நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்தால், கொத்தமல்லி துவையல் ரெடி!!!