ஆரோக்கியம்மருத்துவம்

ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்கள்

மருத்துவ குணங்களும், போஷாக்கும் நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்பது சாலச்சிறந்தது.

மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம், இவைகளில் முக்கியமாக உணவு அமைந்துள்ளது. மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், ஊட்டங்களும் நம்முடைய உணவில் ஒரு சேர உள்ளது. இவைகளில் முக்கிய பங்கு வகிப்பவை சிறு தானியங்கள். இதில் புரதம், வைட்டமின்கள், கொழுப்பு சத்து, மினரல்கள், கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் உடல் எடை அதி கரித்தல், இதய நோய்கள் வராமல் நமது உடலை பாதுகாக்கிறது.

இன்றைய நவீன உலகில் சுத்திகரிக்கப்பட்ட -எனும் முறையால் தானியத்தில் தவிடு மற்றும் கிருமி முழுவதுமாக நீக்கப்படுகிறது. மீதம் உள்ள சூழ்தசையில் வெறும் கார்போஹைரேட்டு சத்து மட்டுமே இருக்கிறது. மற்ற சத்துக்கள் முழுவதுமாக நீக்கப்படுகிறது. இதை உட்கொள்ளும் மனிதனுக்கு நோய்கள் அழையா விருந்தாளியாக வந்து விடுகிறது.

எந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரியாமலேயே மனிதன் வாழ்ந்து வருகிறான். பிறகு நோய்கள் வந்த நிலையில் மருந்துகளையே உணவிற்கு பதிலாக உண்டு வாழும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறான். சிறு தானிய உணவு உண்பதால் கிடைக்கும் 20 விதமான நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

ஊட்டச்சத்து

உடலின் சரியான செயல் பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான ஊட்டசத்துக்கள் சிறு தானியங்களில் நிறைந்துள்ளன. ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைபடும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறு தானியங்களில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே இது ரத்த கோசையை குணப்படுத்த உதவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்து கொண்டால் எலும்புகளை வலுவடைய செய்கிறது.

கரோனரி தமனி கோளாறுகளை தடுக்கிறது

சிறுதானியங்கள் அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளில் அளவினைக் குறைக்க உதவும். சிறுதானியங்கள் ரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து ரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகிறது.

அதிக அளவு வைட்டமின் “பி”

சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் “பி” கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திறமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது. வைட்டமின் பி ரத்தத்தில் உள்ள ஹோர்மோசைஸ்டீன் அளவைக்குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்பு கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது. நியாசின் ரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கிறது. மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயர் அடர்த்தி புரத கொழுப்பின் அளவினை ரத்தத்தில் அதகரிக்க செய்கிறது. இது ரத்த நாளங்களின் தடிப்பு மற்றும் ரத்தக் கசிவு ஏற்படுவதிலிருந்தும் இதயத்தை பாதுகாக்கிறது.

பசையம் (குளுட்டம்) அறவே இல்லை

காய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்களால் மிகவும் நேசிக்கப்படும் உணவு சிறு தானியங்களாகும். ஏனெனில் சிறு தானியங்களில் நிறைந்திருக்கும் புரதசத்து தான் இதற்கு காரணம். தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் சிறு தானியங்களில் இருக்கும் புரதகூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போலவே இருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வென்றால் அதிக சத்துகள் அடங்கிய சிறு தானியங்களில் பசையம் (குளுட்டன்) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படுவது இல்லை. ஆனால் முழு கோதுமையில் அதிக அளவு பசையம் (குளுட்டன்) உள்ளது. பசையம் சிறுதானியங்களில் இல்லாத காரணத்தால் செரிமானத் தன்மையை அதிகமாக்குகிறது.

விரைவான உடல் எடை இழப்பு

சிறுதானியங்களில் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலத்தை கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையை குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது. டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவான வேகத்தில் நடத்துகிறது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அடிக்கடி பசிப்பதை தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கிறது. இதனால் உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாக சிறுதானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

புற்றுநோய்

சிறுதானியங்களில் நார்சத்து மற்றும் தாவர ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. நார்சத்து மற்றும் தாவர ஊட்டசத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்று நோய் வளரும் அபாயத்தை குறைக்கும். லிக்னைன் எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது. பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலிருந்து 50% குறைக்கலாம்.

உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்தல்

தமனிகளில் உள்ள உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறு தானியங்களில் உள்ள மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. மேலும் இது மூச்சுத்தடை நோய் (ஆஸ்துமா) மற்றும் ஒற்றைதலைவலிகள் ஏற்படுவதன் அளவினை குறைக்கிறது.

பசையம் ஒவ்வாமை நோயை தடுத்தல்:

பசையம் ஒவ்வாமை நோய் என்பது சிறு குடலை சேதப்படுத்தும் ஒரு வகையான நோய் ஆகும். இந்நோய் ஏற்படுவதினால் சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் பசையம் போன்ற பசை தன்மை கொண்ட பொருளை தாங்கி கொள்ள முடியாது. இதன் காரணமாகத் தான் சிறுதானியங்களை உட்கொள்ள அதிக அளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. சிறுதானியங்களில் பசையம் கிடையாது. எனவே இந்நோயிலிருந்து காத்து கொள்ளலாம்.

நீரிழிவு நோய்

சிறு தானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதினால் செரிமானத்திற்கான செய்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்து கொள்ள உதவுகிறது. அதிலும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய். மேலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது.

நார்ச்சத்து நிறைந்தது

சிறு தானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறு தானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை இல்லாத தானிங்களாக கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்கு தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.

இதனால் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாய் பெண்கள் நார்ச் சத்து மிகுதியான உணவு களை உட்கொண்டால் கல் உருவாகுதலை தடுக்க உதவும். மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு காரணமான பித்த அமிலங்களின் சுரப்பை குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாகுவது குறைக்கப்படுகிறது என பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிறுதானியங்களில் உள்ள அதிக அளவிலான உயிர்வளியேற்ற எதிர்பொருள்கள் உடலில் உள்ள தீவிரமான நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுகின்றன. மேலும் உயிர்வளியேற்ற எதிர்ப் பொருள்கள் மிக விரைவில் வயதாவதற்கான செயல் முறையின் வேகத்தையும் குறைக்கின்றன. இதனாலேயே மருத்துவர்கள் சிறுதானியங்களை மிகப்பெரும் மருந்தாக சிறியவர்கள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கின்றனர். தசைகள் சீரழிவதை குறைக்கிறது.

சிறுதானியங்கள் அதிக புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டை குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.

தூக்கக் குறைபாட்டினை குறைக்கிறது

சிறுதானிங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். செரோபோனின் அளவை அதிகப்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் ஒரு குவளை சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் குடித்து வந்தால் ஒலியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மையால் அல்லல்படுபவர்கள் இரவில் சிறு தானியங்களை உண்ணலாம். பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகு அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கேழ்வரகு உடலில் மார்பகப் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவுகிறது.

அதிக அளவு பாஸ்பரஸ்

சிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் செல்களின் வடிவத்தை கட்டமைக்க உதவுகிறது. சிறு தானியங்களில் உள்ள அடினைன் டிரைபாஸ்ட் எனும் கலவைகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலை பலமடங்கு அதிகரிக்கின்றது. மேலும் பாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு கூட்டமைப்பினை கொண்டுள்ளது.அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவற்றிற்கு பாஸ்பரஸ் இன்றியமையாத தேவையாக உள்ளது.

இளமையான சருமம் பெறுதல்

அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடன், மிருதுவான தோற்றத்துடனும், பொலிவடைய செய்கிறது. சேதமடைந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்ட மின்&சி, வைட்டமின்&பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக சருமத்தை காக்கிறது. சிறுதானியங்களில் தோலில் புதுசெல்கள் வளர்வதை ஊக்குவிக்கிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கின்றன.

சிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது.

இளநரை

இளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது மொட்டையாவது, செம்பட்டையாக மாறுவது திசுக்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன் மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன-. சிறுதானியங்களை இளைஞர்கள், இளைஞிகள் அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது.

கீழ்வாதம் எலும்பு முறிவு

கீழ்வாதம் வருவது தடுக்கப்படுகிறது. எலும்பு முறிவுகளிலிருந்து மிக விரைவில் மீள உதவுகிறது. இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய சிறு தானியங்களை அதிகம் உணவாக எடுத்து கொள்வது நல்லது. இவ்வளவு மருத்துவ குணங்களும், போஷாக்கும் நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்பது சாலச்சிறந்தது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker