சமையல் குறிப்புகள்

உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான பானம். இன்று நெல்லிக்காய் ஜூஸை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • நெல்லிக்காய் – 10
 • பச்சை மிளகாய் – 1
 • கறிவேப்பிலை – சிறிது
 • இஞ்சி – 1 இன்ச்
 • சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
 • உப்பு – 1 சிட்டிகை
 • தண்ணீர் – தேவையான அளவு
 • தேன் – தேவையான அளவு

செய்முறை :

 • ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
 • நெல்லிக்காயில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
 • நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தண்ணீரைத் தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 • பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும்.
 • பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரிமாறினால், நெல்லிக்காய் மசாலா ஜூஸ் ரெடி!
 • குறிப்பு: இந்த வடிகட்டிய நெல்லிக்காய் சாற்றினை காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker