குங்குமாதி தைலம் நிறத்தை அதிகரிக்க உதவுமா?
பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலத்தை சரும நிறத்தை அதிகரிக்க பயன்படுத்தலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதிதைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவிவிடலாம்.
எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும். குங்குமாதி லேபம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு,கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
இது சருமத்திலுள்ள இறந்தசெல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தத்தை சுத்திகரிக்கிற டானிக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் சருமம் பளபளக்கும்.