சமையல் குறிப்புகள்

ஸ்பெஷல் தயிர் சாதம்

தயிர் சாதம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஸ்பெஷல் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு மதியம் கொடுத்தனுப்ப சிறந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இது.

தேவையான பொருட்கள் :

 • பச்சரிசி – 1 கப்,
 • பால் – அரை கப்,
 • புளிக்காத புதிய தயிர் – ஒன்றை கப்,
 • இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது – 1 டீஸ்பூன்,
 • வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
 • பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
 • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிது,
 • கடுகு – அரை டீஸ்பூன்,
 • மிளகாய் வற்றல் – 3,
 • பொடியாக நறுக்கிய முந்திரி – 4 டேபிள் ஸ்பூன்,
 • திராட்சை – 20,
 • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
 • உப்பு – தேவைக்கு.

செய்முறை :

 • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • சாதத்தை குழைவாக வேக வைத்து கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
 • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் தாளிதக் கலவை, சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
 • அருமையான ஸ்பெஷல் தயிர் சாதம் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker