ஃபேஷன்புதியவை

என்ன பர்பியூம் அடிச்சாலும் சீக்கிரம் வாசனை போயிடுதா?… இப்படி செய்ங்க… நாள் பூரா மணக்கும்

காலையில் எழுந்து டிப் டாப் ஆ டிரஸ்லாம் பண்ணி பெர்மியூம் போட்டு பைக்ல ஆபிஸ்க்கு போறதற்குள்ள நம்ம பெர்மியூம் ஸ்மல் காணாமல் போய் விடுகிறது. உங்களிடமிருந்து வரும் வாசனை கூட மற்றவர்கள் முன்னிலையில் ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த பெர்மியூம் வாசனை நீண்ட நேரம் வைத்திருக்க பெரய அறிவியல்லாம் தேவையில்லைங்க. சின்ன சின்ன ட்ரிக்ஸ் போதும். அப்புறம் என்னங்க காலையில் போட்ட பெர்மியூம் மாலையில் நீங்க வீடு வந்து சேரும் வரை மணக்க கூடும். அந்த ட்ரிக்ஸ்களை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

வெப்பமான இடத்தில் பெர்மியூம்களை வைக்காதீர்கள்

வெப்பமான இடத்தில் பெர்மியூம் பாட்டில்களை வைக்கும் போது அதன் ஈரப்பதம் குறைந்து வாசனை போய்விடும். எனவே நல்ல குளிர்ந்த இடங்களில் அதை வையுங்கள். குறிப்பாக ஜன்னலுக்கு அருகில் வைக்க வேண்டாம். இப்படி செய்தால் உங்கள் பெர்மியூம் பாட்டிலில் வாசனை நீண்ட நாள் நிலைத்திருக்கும்.

வாசலின் அல்லது லோசன் தடவுதல் பெர்மியூம் போடுவதற்கு முன் அக்குள் களில் வாசலின் அல்லது லோசனை தடவிக் கொள்ளுங்கள். காரணம் வறண்ட சருமத்தை விட எண்ணெய் சருமத்தில் பெர்மியூம் நீண்ட நேரம் நிலைத்திருக்கும். மாய்ஸ்சரைசர் கூட அப்ளே செய்து நறுமணத்தை நிலைபெறச் செய்யலாம்.

குளித்த பிறகு எப்பொழுதும் குளித்து முடித்தவுடன் பெர்மியூம் போடுங்கள். ஏனெனில் சருமத்தில் உள்ள ஈரப்பதம் பெர்மியூம் நறுமணத்தை பிடித்து வைத்துக் கொள்ளும். இதனால் நீண்ட நேரம் நிலைக்கும், ஆடைகளிலும் பெர்மியூம் கறை படாது.

வெப்பமான சரும பகுதிகள் பெர்மியூம்யை ஸ்பிரே செய்வதற்கு கூட சரியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல சூடான சரும பகுதிகளில் ஸ்பிரே செய்யும் போது உடல் முழுக்க வாசனை பரவும். மணிக்கட்டு, அக்குள், கழுத்து, வயிற்று பகுதிக்கு கீழ், மூட்டுக்கு பின்னால் கணுக்கால் பகுதிகள் போன்றவை நீண்ட நேரம் நறுமணத்தை நிலைத்திருக்க செய்கின்றன.

நறுமணத்தை தேர்ந்தெடுத்தல் முதலில் எந்த மாதிரியான பெர்மியூம் வாங்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ‘Eau de Parfum’ பெர்மியூம் நீண்ட நேரம் நறுமணத்தை கொடுக்கும். சந்தனம் மற்றும் ஆம்பர் வகை பெர்மியூம்கள் அக்குள் கருப்பை போக்க கூடும். எனவே அந்த மாதிரியான பெர்மியூம்களை தேர்ந்தெடுக்கலாம்.

தேய்க்க கூடாது சில பேர்கள் பெர்மியூம் போட்ட பிறகு சருமத்தில் அதை தேய்த்து விடுவார்கள். அப்படி செய்வது வாசனை முழுவதையும் நீக்கி விடும். எனவே போட்ட பிறகு அப்படியே விட்டு விடுங்கள். வாசனை தானாக பரவட்டும்.

உடல் முழுவதும் பெர்மியூம் லேசாக இருக்க வேண்டும் என நினைத்தால் காற்றில் அடித்து விட்டு அதனுள் நடந்து செல்லுங்கள். உடம்பு முழுவதும் வாசனை பரவி கமகமக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker