நம்பிக்கையே வாழ்க்கை
தைரியத்தின் முதல் எதிரி யார் என்றால் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தான். இந்த இரண்டையும் முதலில் ஒரு மனிதன் அடியோடு ஒழித்து விட்டால் கண்டிப்பாக தைரியத்துடன் தான் காணப்படுவான்.
இன்று பூமியில் திறமையானவர்கள் மட்டுமே பெரிய பெரிய பதவிகளில், அரசியல்வாதிகளாக, தொழில் நுட்ப கலைஞர்களாக இருக்கிறார்கள். ஏன் விஞ்ஞானிகளை கூட எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் தான் திறமையின் மொத்த உருவமே.
இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் தங்களின் திறமைகளை தங்களின் தகுதியினை தங்களின் ஆற்றலை எப்படியோ ஒரு விதத்தில் மக்கள் உணரும்படி அறிந்திருக்கிறார்கள். எனவே அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். வேறு தகுதியானவர்கள் வேறு திறமையானவர்கள் இந்த பூமியில் இல்லையாயென்றால், இருக்கிறார்கள். பிறகு ஏன் அந்த தோராயமான நபர்கள் மட்டும் வெளியே தெரிகிறார்கள் என்றால் மீதம் உள்ள லட்ச கணக்கான திறமைசாலிகளுக்கு போதுமான மனதைரியம் இல்லை.
அதாவது தனது திறமையை பயன்படுத்தி கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் போதிய தைரியம், துணிச்சல் இல்லாமல் அவர்கள் தங்களது வாய்ப்பை கோட்டை விட்டுவிடுகின்றனர். எனவே இந்த கால கட்டத்தில் உண்மையான திறமைசாலி வெளியே தெரியாததற்கு காரணம் என்னவென்றால் போதிய துணிச்சல் இல்லாததே.
வயதான பெரியவர்கள் பெரும்பாலும் வாழ்வில் அனைத்து விதமான அனுபவங்களை பெற்று விடுவதால் அவர்கள் எந்த ஒரு காரியத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்வதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் ஆர அமர யோசித்துதான் செய்வார்கள். அதனால் அவர்களுக்கு பெரும்பாலும் தோல்விகள் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு என்ன செய்தால், எது நடக்கும் என்று தான் முன்பு பெற்ற அனுபவத்தின் வாயிலாக ஒரு கணிப்பு கணித்துவிடுகிறார்கள்.
வயதான பருவத்தில் ஏற்படும் தைரியம் காய்ந்த சுரைக்காய் ஆக அதுவும் கறிக்கு உதவாது. மாறாக இளமைப் பருவத்தில் உள்ளதே ஒரு தைரியம். அது தான் நம்மை எந்த ஒரு செயலையும் எந்த ஒரு சாதனையையும் எந்த ஒரு இலக்கையும் எந்த ஒரு லட்சியத்தையும் சாதகமாக நினைக்க வைத்து அதை சாதிக்க தக்க ஏற்பாடுகளையும் செய்கின்றது. எனவே எந்த ஒரு மனிதனும் இளமை பருவத்தில் உள்ள தைரியத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
எனவே புத்திசாலி இளைஞர்கள் கண்டிப்பாக அந்த தைரியத்தை ஆக்கப் பூர்வமான வழியில் பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி அடைவார்கள். தைரியத்தின் முதல் எதிரி யார் என்றால் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தான். இந்த இரண்டையும் முதலில் ஒரு மனிதன் அடியோடு ஒழித்து விட்டால் கண்டிப்பாக தைரியத்துடன் தான் காணப்படுவான்.
இந்த பரபரப்பான கம்ப்யூட்டர் உலகத்தில் அது எப்படி சாத்தியம் என்றால் தியானம் ஒன்றே தான் வழி. அதாவது தியானத்தின் மூலம் எந்த ஒரு பண்புகளையும், குணநலன்களையும் மாற்ற முடியும். அதன் பின்னர், நமக்கு கண்டிப்பாக ஒரு ஒளி மயமான எதிர்காலம் அமையும்.