சமையல் குறிப்புகள்

வீட்டிலேயே செய்யலாம் சிலோன் பரோட்டா

ஹோட்டலில் சிலோன் பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • கோதுமை மாவு – ஒரு கப்,
 • மைதா மாவு – ஒரு கப்,
 • நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
 • ஆப்பசோடா – ஒரு சிட்டிகை,
 • உப்பு – அரை டீஸ்பூன்,
 • எண்ணெய் – தேவையான அளவு.

பூரணத்துக்கு:

 • காய்கறி கலவை – கால் கப்,
 • பன்னீர் – 200 கிராம்,
 • பெரிய வெங்காயம் – 2,
 • பச்சை மிளகாய் – 4,
 • கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
 • மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
 • பூண்டு – 6 பல்,
 • மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,
 • பட்டை, லவங்கம், ஏலக்காய்தூள் பொடித்தது – அரை டீஸ்பூன்,
 • எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

 • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, நெய், ஆப்பசோடா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
 • பன்னீரை துருவிக்கொள்ளுங்கள்.
 • வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
 • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
 • வெங்காயம் நன்றாக வதங்கியதும் பன்னீர், கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பொடித்த மசாலாதூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
 • பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் நிறைய பூரணத்தை நிரப்புங்கள்.
 • பின்னர் மாவு தொட்டு முக்கோண வடிவத்தில் திரட்டி வைக்கவும்.
 • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
 • சுவையான சத்தான சிலோன் பரோட்டா ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker