சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பும் பேபிகார்ன் பஜ்ஜி

பேபிகார்னில் சாலட், பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பேபிகார்னை வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • பேபிகார்ன் – 12,
  • கடலை மாவு – 1 கப்,
  • அரிசிமாவு – 1 டீஸ்பூன்,
  • கார்ன்ஃப்ளவர் – 1 டீஸ்பூன்,
  • உப்பு – சுவைக்கேற்ப,
  • எண்ணெய் – தேவைக்கு,
  • ஆப்ப சோடா – சிட்டிகை

அரைக்க:

  • பச்சை மிளகாய் – 3,
  • இஞ்சி – 1 துண்டு,
  • பூண்டு – 3 பல்.

செய்முறை:

  • பேபிகார்னை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு வைத்து பின்னர் எடுக்கவும்.
  • அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு பேபி கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.
  • சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker