ஆராய்ச்சி மூலம் உலகின் சக்திவாய்ந்த மந்திரமாக காயத்ரி மந்திரம் தேர்ந்தெடுக்க பட்டதற்கான காரணம் என்ன
கடவுள்களை வழிபடுவதற்காகவே பிரத்யேகமாக சில மந்திரங்களை உபயோக்கிறார்கள். இந்த மந்திரங்கள் ஆன்மீகரீதியாகவும், ஆரோக்கியரீதியாவும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த மந்திரங்களில் மிகவும் முக்கியமானது என்றால் அது காயத்ரி மந்திரம்தான். மற்ற மந்திரங்களை காட்டிலும் காயத்ரி மந்திரம் சக்திவாய்ந்ததாக இருக்க காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆராய்ச்சி
டாக்டர். ஹாவர்ட் ஸ்டீங்கிங்கில் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மந்திரங்கள், பாடல்கள் போன்றவற்றை சேகரித்து அவற்றின் சிறப்பு மற்றும் சக்தி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் முடிவுகள் என்னவாயிற்று என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.
காயத்ரி மந்திரம்
அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்து மதத்தை சேர்ந்த காயத்ரி மந்திரமானது நொடிக்கு 110,000 ஒலி அலைகளை ஏற்படுத்தியது. இந்த எண்ணிக்கையானது மற்ற எந்த மந்திரத்தை காட்டிலும் மிகவும் அதிகமானதாக கருதப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில் காயத்ரி மந்திரம்தான் உலகின் சக்திவாய்ந்த மந்திரம் என்று அறிவிக்கப்பட்டது.
காரணம்
காயத்ரி மந்திரம் சக்திவாய்ந்த மந்திரமாக அறிவிக்கப்பட காரணம் குறிப்பட்ட அதிர்வெண்கள் அல்லது ஒலிக்கலவையில் இருக்கும் மந்திரங்கள் குறிப்பிட்ட பலன்களையும், ஆன்மீகம் தொடர்பான முக்கியத்துவத்தையும் குறிக்கும்.
ஹாம்பர்க் பல்கலைக்கழகம்
இந்த முடிவை அடுத்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹாம்பர்க் பல்கலைக்கழகம் காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தி உடல்ரீதியான மற்றும் மனரீதியான உருவாக்கத்தை எப்படி அதிகரிப்பது என்றும் எப்படி பயன்படுத்துவது என்றும் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தது.
ஒலிபரப்பு
ஆராச்சியை தொடங்கும் பொருட்டு தென் அமெரிக்கா, சூரினாம், ஆர்ம்ஸ்டெர்டாம், ஹாலந்து போன்ற மாகாணங்களில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மாலை 7 மணி முதல் 15 நிமிடத்திற்கு காயத்ரி மந்திரத்தை ஒலிபரப்பினார்கள்.
முடிவுகள்
இரண்டு ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவில் காயத்ரி மந்திரத்தை கேட்கும்போது ட்ரில்லியன் கணக்கிலான நியூரான்கள் விழித்து கொள்வது கண்டறியப்பட்டது. இது தொடர்ச்சியாக நடக்கும்போது மனிதர்களின் மூளையின் செயல்திறன் இருமடங்காவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
விஞ்ஞான உண்மைகள்
காயத்ரி மந்திரமானது விஞ்ஞான பூர்வமானது. இது உலகளாவிய ஒலி மற்றும் அதிர்வெண் விதிகளுக்கு உட்பட்ட மந்திரமாகும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி அலைகள் அனைத்து மனிதர்களின் மீதும் வெப்பம் மற்றும் குளிர் விளைவுகளை உருவாக்குகிறது, இதனால் உடனடியான பலன்களை உணரலாம். இந்த மந்திரத்தின் மூலம் ஆராவில் ஏற்படும் மாற்றம் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து தீயசக்திகளையும் விரட்டும். இதன்மூலம் நம்முடைய ஆராவின் அன்பு , ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற குணங்கள் பலப்படும்.