சமையல் குறிப்புகள்

சப்பாத்திக்கு அருமையான முட்டை பட்டாணி பொரியல்

சப்பாத்தி, நாண், சாம்பார் சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

 • முட்டை – 4
 • பட்டாணி – 100 கிராம்
 • பெரிய வெங்காயம் – 1
 • தக்காளி – 1
 • பச்சை மிளகாய் – 1
 • சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
 • மிளகுப்பொடி – 1 டேபிள் ஸ்பூன்
 • எண்ணெய் – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு
 • கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

 • பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
 • தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
 • வெங்காயம் நன்றாக வெந்தும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
 • தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
 • அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
 • முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
 • சூப்பரான முட்டை, பட்டாணி பொரியல் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker