சமையல் குறிப்புகள்
குளுகுளு மாம்பழ மில்க்ஷேக்
குழந்தைகளுக்கு மில்க்ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாம்பழத்தை வைத்து சூப்பரான மில்க்ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- மாம்பழம் – 2
- குளிர்ந்த பால் – 2 கப்
- வென்னிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப்
- சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் பால் மற்றும் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடித்து இறக்கி பரிமாறினால், மாம்பழ மில்க் ஷேக் ரெடி!!!