ஆரோக்கியம்

இந்த சம்மரை சமாளிக்க உங்க குழந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம்?

தற்போது நிலவி வரும் வெப்ப நிலையின் தாக்கம் குழந்தைகளின் உடலை பலவீனப்படுத்தக்கூடியது. எனவே அதில் இருந்து அவர்களைப்பாதுகாத்துக்கொள்ள இதமான, சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.

கோடைகாலத்தில் குழந்தைகளை தாக்கும் நோய்களின் வரிசையில் முதலிடம் பெறுவது சூரிய வெப்பம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குழந்தைகளை பாதித்து வருகின்றது. இந்த நிலையில் அவர்களை கோடைகால வெயிலில் இருந்து பாதுகாக்கும் உணவு முறைகளை காணலாம்.

தர்பூசணி பழத்தை விரும்பாதவர் யார்? ஆண்டு முழுவதும் கிடைக்க கூடிய இந்தப்பழத்திற்கு கோடைகாலத்தில் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

தர்பூசணி பழத்தின் மருத்துவ நன்மைகள்:

1.)தர்பூசணி ஜுசை கர்ப்ப காலத்தில் பெண்கள் குடித்தால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமாகும், குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

2.)கண் அழுத்த நோய், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கண் குறைபாடு குணமாகும்.

3.)முடி கொட்டுதல் தொல்லையில் அவதிப்பட்டு வருபவர்களுக்கு முடி வளர்ச்சி ஏற்படும்.

4.)நெஞ்செரிச்சலாக இருக்கும் நேரத்தில் ஒரு தர்பூசணியை நறுக்கி, அதில் நான்கு அல்லது ஐந்து சிறு துண்டுகளைச் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கிவிடும்.

5.)இதில் நார் சத்துகள் மற்றும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

தக்காளிப் பழம்

அடுத்து தக்காளிப்பழம், என்ன யோசிக்கின்றீர்கள், தக்காளி ஒரு காய்கறி வகையைச்சார்ந்ததாக இருந்தாலும் அது பழவகைகளுக்கும் அடங்கின்றது.

தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் விட்டமின் C நம் உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுத்து மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது . தக்காளியில் உள்ள குளோரின், பொட்டாசியம், ஃபைபர் மற்றும் விட்டமின் C, இதயம் சீராக இயங்குவதற்கும், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது.

தக்காளியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், அது இன்சுலின் அளவையும், நம் உடலில் சேரும் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தக்காளியில் உள்ள விட்டமின் A, பீட்டா கரோட்டீன் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் சூரிய ஒளியினால் ஏற்படும் நிற மாற்றங்களை சரிசெய்கிறது.

தக்காளியில் உள்ள விட்டமின் A கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இது ரெட்டீனாவின் செயல்பாடுகளுக்கு துணைபுரிந்து, கண் பார்வை பிரச்சனை வராமல் தடுக்கிறது . தக்காளியில் உள்ள Lycopene மற்றும் மக்னீசியம் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகமாக்கி, தைராய்டு சுரப்பியை சீராக்குகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை இந்திய உணவு மேஜைகளில் அதிகமாக காணலாம். வெள்ளரிக்காய் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. அதன் நன்மைகளை காண்போம்.
*வெள்ளரிக்காயை தோல் அகற்றாமல் சாப்பிடுவதே மிகவும் நல்லது. ஏனெனில், வெள்ளரியின் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி அதிகம் காணப்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.

*வெள்ளரிக்காய் சிறுநீரக நலன் காக்க மிகவும் சிறப்பான மருந்து. காரணம், நமது உடலில் உள்ள Uric அமிலத்தை குறைக்க வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது.
ரத்தத்தின் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிற பொட்டாசியம் வெள்ளரிக்காயில் ஏராளமாக உள்ளது.

*உடலின் சூட்டைத்தணித்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும் குணம் கொண்டது வெள்ளரிக்காய் என்பதால்தான் வெயில் காலத்தில் இதற்கு மவுசு அதிகமாக இருக்கிறது.

தயிர்

தயிர் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஓர் உணவுப்பொருள். தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. இதை தினமும் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்,

தயிரின் பயன்கள் 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும் .

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது .

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது .

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை. தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

புதினா கீரை

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

வெங்காயம்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள “அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

1. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

2. குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம் கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

3. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

4. முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

5. செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

6. சீதோஷ்ண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

7. புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

8. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

9. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

10. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.

11. அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

இளநீர்

இன்றைய குழந்தைகள் நாள் முழுக்க வெயிலோடு விளையாடுவதில்லை என்றாலும், அதீத வெப்பத்தால் சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

வெயிலில் வியர்த்து வழியும்போது, உடம்புக்கு அத்தியாவசியமான தாது உப்புகளும் வெளியேறிவிடும். இதுபோன்ற சமயத்தில் பிள்ளைகள் சோர்ந்து போவார்கள். சிலருக்கு மயக்கம் வரை செல்லும். இந்தப் பிரச்னையைத் தடுக்க, பானைத் தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு, வெல்லம், எலுமிச்சம் பழம் பிழிந்து பானகம் செய்யுங்கள்.

தினமும் 3 முதல் 4 தடவை வரை குடிக்கக் கொடுங்கள். தினம் ஒரு இளநீர் குடிப்பது பிள்ளைகளின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்; உடம்பில் தாது உப்புகள் குறையாமல் பாதுகாக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் பழம், காய், இலை என அனைத்துமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதில் செடி, கொடி என்று இரண்டு வகைகள் உண்டு. புளிப்புச்சுவை கொண்ட எலுமிச்சை, குளிர்ச்சியானது.

பசியைத் தூண்டி நா வறட்சியைப் போக்கும். இயற்கையாகக் கிடைக்கும் வைட்டமின் சி இதில் நிறைய உண்டு. அதுமட்டுமில்லாமல் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்களும் உண்டு. வெயில் காலங்களில் வெளியில் சென்று வந்த உடன் நிறைய பேருக்கு தலைவலி ஏற்படும்.

எலுமிச்சை பழத்தின் தோலை நன்றாக காய வைத்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தலைவலி வரும் போது இந்தப் பவுடரை தண்ணீரில் கரைத்து வலி இருக்கும் இடங்களில் தடவி வந்தால் இந்த பசை குறையும் போது தலைவலி குறைந்து விடும்.
கோடைகாலத்தில் சிலருக்கும் வியர்க்குரு மற்றும் கட்டிகள் வரும். அதற்கு எலுமிச்சை மிகச் சிறந்த மருந்து. எலுமிச்சை சாற்றில் சந்தனத்தை அரைத்து தடவினால் வியர்க்குருவும், வேனல் கட்டியும் சரியாகும். வெயில் காலங்களில் அதிகளவு எலுமிச்சை சாறு பருகுவது நல்லது. உடல் வெப்பத்தை தணிப்பதற்கு பயன்படுகிறது.

பெருஞ்சீரகம்

நமது நாட்டு பாரம்பரிய சமையலில் தயாரிக்கப்படும் எந்த ஒரு உணவிலும் வாசனை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வாசனை பொருட்கள் என்றாலும் சாப்பிபடுபவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல வித நோய்களை தீர்க்கும் திறன் இப்பொருட்களுக்கு உண்டு.

செரிமானம் பலருக்கும் சமயங்களில் சாப்பிட்ட உடன் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிறு உப்பிபோதல் போன்ற பிரச்சனைகளும் உருவாகிறது. இப்படியான சமயங்களில் பெருஞ்சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு அதை நன்கு காய்ச்சி, சற்று இதமான சூட்டில் அந்நீரை வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் பருகினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சுவாச நோய்கள் குளிர்காலங்களில் சிலருக்கு ஜலதோஷம் பீடித்து கொண்டு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் வானிலை மாறுபடும் போது சுவாசிப்பதில் சற்று சிரமத்தை உணர்கின்றனர். தினமும் சிறிது பெருஞ்சீரகத்தை மென்று தின்று, சிறிது வெண்ணீரை அருந்தினால் மேற்கண்ட சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் உடனடியாக தீரும்.

நீர்கோர்ப்பு  அல்லது நீர்கோர்த்துக்கொள்ளுதல் என்பது சிலருக்கு உடலில் இருக்கும் திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்து மிகுந்த துன்பத்தை கொடுக்கும். பெருஞ்சீரகம் உடனடி பலன் தராது என்றாலும், இந்த நீர்கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள், அவ்வப்போது பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம் இருக்கிறது.

வெயில் காலத்தில், உடலின் சூட்டை அதிகப்படுத்தும் சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும். எப்போதாவது சாப்பிட்டாலும், அன்றைக்கு மோர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். தவிர, கோடை கொடைகளான வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker