அழகு..அழகு..புதியவை

மேக்கப் இல்லாமல் ஜொலிக்க வேண்டுமா? அப்ப இத பண்ணுங்க

தன் உண்மையான வயதைவிட இளமையாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை எல்லோரின் ஆழ்மனதிலும் இருப்பதுதான். ஆசை மட்டும் இருந்தால் போதுமா? உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

1. உங்கள் கூந்தல் இளமையாக இருந்தால், நீங்களும் இளமையாகத் தெரிவீர்கள். இதற்கு வாரம் இருமுறையோ அல்லது ஒருமுறையாவது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கூந்தலின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரைத் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஹேர்வாஷ் செய்யவும். எண்ணெய்ப் பசை குறைவான ஹேர்க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியலும் ஹேர்க்ரீமும் தலைமுடியை லேசான ஈரப்பதத்துடனே வைத்திருக்கும். இந்த ஈரப்பதம், கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் உங்களை இளமையாகக் காண்பிக்கும்.

2. ஆஃபீஸுக்குப் போகும் அவசத்தில் தலைமுடியைச் சரியாக வாரிக்கொள்ளாமல் அள்ளிமுடிந்து போகாதீர்கள். கலைந்த கூந்தல்தான் உங்கள் வயதை அப்பட்டமாகக் காட்டும் முதல் எதிரி.

3. மாதம் ஒருமுறை கூந்தலின் நுனியை டிரிம் பண்ணிவிடுங்கள். அடியில் சமமாக இருக்கிற தலைமுடியும் உங்களுக்கு நீட் லுக் கொடுக்கும்.

4. ஓப்பன் ஹேர் விடுபவர்கள், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது கிளிப்ஸை மாற்றி மாற்றி யூஸ் பண்ணுங்கள்.5. தொப்பை இருப்பவர்கள், இன்றைய டிரெண்ட்படி இறுக்கமாக ஆடை அணிந்தால், தொப்பை அசிங்கமாகக் காட்டிவிடும். தொளதொள டிரெஸ்ஸிங்கும் செய்யாதீர்கள். உங்கள் உடல்வாகுக்கு ஏற்றபடி ஆடை அணியுங்கள். முப்பது வயதுகளில் உடம்பு வெயிட் போட்டுவிடும் என்பதால், லாங் டாப் – லெகின் என்று மேட்ச் செய்தால் உடல் மெலிவாகவும் இளமையாகவும் தெரிவீர்கள்.

6. சில பெண்களுக்கு வயது ஏற ஏற, மேல் கை வெயிட் போட ஆரம்பிக்கும். அது அவர்களுடைய ஜீன். அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அதை மறைக்கும் வகையில் முட்டி வரை ஸ்லீவ் டிரெஸ் செய்தால், உண்மையான வயது வெளியில் தெரியாது.

7. மாதத்துக்கு ஒருமுறை புருவங்களை திருத்திக்கொள்ளுங்கள். இது முகத்தை பளிச்சென்றுக் காண்பித்து, இளமையைக் கூட்டும்.

8. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பார்லருக்குப் போய் ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள். மரு, மாசு, பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் இல்லாமல் ஈவன் டோனாக இருக்கும். உதட்டுக்கு மேலே பூனை முடிகள் இருந்தால், பார்லரில் திரெட்டிங் செய்துகொள்ளுங்கள். மாசு மருவற்ற சருமம் இளமையின் அடையாளம். பார்லருக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே கடலை மாவு, பயித்தம் மாவு, முல்தானி மிட்டி, பால், தேன், தக்காளிச்சாறு எனப் பயன்படுத்தி சருமத்தில் டெட் செல்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான சருமம், லேசான எண்ணெய் பளபளப்புடன் மின்னுவது உங்களை யூத்ஃபுல்லாக காட்டும்.
9. உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற கலரில் ஆடை அணியுங்கள். இதைக் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் முகத்தின் ஒரு பக்கத்தில் தங்க கம்மலையும், இன்னொரு பக்கத்தில் ஒயிட் மெட்டல் கம்மலையும் வைத்துப் பாருங்கள். தங்க நிறம் பொருத்தமாக இருந்தால் மெரூன், கிரீன், ரெட், பிங்க், பிரவுன் போன்ற ஷேட்ஸ் பொருத்தமாக இருக்கும். ஒயிட் மெட்டல் பொருத்தமாக இருந்தால், ஸ்கை ஃப்ளூ, பேபி பிங்க், லேவண்டர், பர்பிள், லெமன் யெல்லோ போன்றவை உங்கள் ஸ்கின்னுக்கு ஒகே. ஸ்கின் டோனுக்குப் பொருத்தமான கலர் டிரெஸ்ஸை அணிவதும் இளமையாகக் காட்டும் சீக்ரெட் வழிதான்.

10. நிறையப் பெண்கள் முகத்துக்கும் ஆடைக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பாதங்களை உலர்வாகவும் பித்தவெடிப்புடனும் ஈரப்பதமே இல்லாமல் வைத்திருப்பார்கள். கைகளும் கால்களும் நம் உண்மை வயதைக் காட்டிக்கொடுக்கும் எட்டப்பன்கள். எனவே, நகங்களைச் சீராக வெட்டி, லேசாக ஆயில் தடவி ஈரப்பதத்துடன் மெயின்டெய்ன் பண்ணுங்கள். ஸ்லிப்பர், ஹேண்ட்பேக் போன்றவற்றை இரண்டு, மூன்று என வைத்துக்கொண்டு டிரெஸ்ஸுக்கு மேட்சாக அணியுங்கள். வருஷம் முழுக்க ஒன்றையே பயன்படுத்தாதீர்கள்.
Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker