சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: பிஸ்தா பாயாசம்
தேவையான பொருட்கள் :
பிஸ்தா – கால் கிலோ
ரவை – 50 கிராம்
சர்க்கரை – தேவைக்கு
பால் – 1 லிட்டர்
கன்டென்ஸ்ட் மில்க் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
பிஸ்தா எசன்ஸ் – சிறிதளவு
நெய் – தேவைக்கு
செய்முறை:
பாதி அளவு பிஸ்தாவை பிரித்தெடுத்து அதில் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
மீதமுள்ள பிஸ்தாவை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் நறுக்கிய பிஸ்தாவை கொட்டி வறுத்தெடுக்கவும்.
பின்பு அதனுடன் ரவையை சேர்த்து கிளறவும்.
பின்னர் பாலில் அரைத்துள்ள பிஸ்தா விழுதை கொட்டி கிளறவும்.
அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக வெந்ததும் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான பிஸ்தா பாயசம் ரெடி.