ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

ஆஸ்துமா நோயால் வரும் பாதிப்பு

ஆஸ்துமா நோயால் வரும் பாதிப்பு

குளிர் என்றாலே ஆஸ்துமா நோயாளிகளுக்கு பயம்தான். உலக அளவில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆஸ்துமா நோய் பொதுவாக குழந்தை பருவத்திலேயே ஏற்படும். இந்நோயின் முக்கிய அறிகுறிகள் இளைப்பு, இருமல், நெஞ்சு இறுக்கம் உள்ளிட்டவை.


குழந்தைகளிடையே மிக நாட்பட்ட நோயாக கருதப்படுவதும் இந்நோய்தான் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இந்நோய் அடிக்கடி தாக்காமல் இருக்க ஒவ்வாமையை தவிர்க்க வேண்டும்.

காற்றின் மூலம் பரவும் கிருமிகளால் இந்நோய் தூண்டப்படுகிறது. காய்ச்சல், புகைபிடித்தல், புகை, காற்று மாசு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு, குளிர் காலம், நல்ல மணம் போன்றவை ஆஸ்துமாவை தூண்டுவதற்கு காரணமாக இருக்கின்றன. பதற்றத்தை தவிர்த்தால் பாதி நோய் நீங்கிவிடும் என்பது ஆஸ்துமாவுக்கு சரியாக பொருந்தும். ஆஸ்துமா நோயாளிகளுக்காக பழைய சினிமா பாடல்களை டாக்டர்கள் பாடினர். இந்த பாடல்களில் சரியான ரிதத்தில் மூச்சை நிறுத்தி வெளியிட்ட விதம், மூச்சுப்பயிற்சிக்கு நல்ல உதாரணமாக இருந்தது.

ஆஸ்துமாவை தவிர்க்க என்ன செய்யவேண்டும்? என்பது பலரது கேள்வி. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்துமா ஒரு அரிய நோய். இன்றோ இது பெருவாரியாக இருக்கிற நோயாக வளர்ந்துவிட்டது. ஆண்டுதோறும் சராசரியாக 2 லட்சம் பேர் ஆஸ்துமா பாதிப்பு காரணமாக உயிரிழக்கின்றனர். மரபுவழி பாதிப்பைவிட சுற்றுச்சூழல் மாசு, மாறி வரும் வாழ்க்கை முறையே ஆஸ்துமா நோயை வரவழைக்கின்றன. நெஞ்சு இறுக்கம், தீவிரமான நீடித்த இருமல், குறுகிய மூச்சு, மூச்சிளைப்பு ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகள்.


‘அலர்ஜி‘ எனப்படும் ஒவ்வாமையே ஆஸ்துமாவுக்கு முக்கிய காரணம். செல்லப்பிராணிகள், எலி, கரப்பான் ஆகியவற்றில் இருந்துகூட இந்த பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது.

உலகில் உள்ள ஆஸ்துமா நோயாளிகளில் பாதி பேர், ஒவ்வாமை மூலமாகவே ஆஸ்துமா நோயை பெற்றிருக்கிறார்கள். ஒவ்வாமை இல்லாமலும், குடும்பத்தில் வேறு யாருக்கும் இல்லாமலும், வயதான பிறகு இந்நோயை பெற்றவர்களாக ஏராளமானவர்கள் உள்ளனர்.


சாதாரண சளிபிடித்தலில் தொடங்கி படிப்படியாக மூச்சிளைப்பு வந்து, ஆஸ்துமா நோய் பெரும் க‌ஷ்டத்தை கொடுக்கக்கூடியது. புகைபிடிப்பது ஆஸ்துமா நோயை அதிகரிக்கச் செய்யும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் புகைபிடித்தால் பிறக்கும் குழந்தைக்கும் ஆஸ்துமா நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker