ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

கல்லீரலை கவனியுங்கள்

கல்லீரலை கவனியுங்கள்...

உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. ரத்தத்தை சுத்திகரித்தல், ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல் போன்ற முக்கியமான பணியை அது செய்கிறது. கல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். முரண்பாடான உணவுகளை சாப்பிடுவது, மரபணு ரீதியான பிரச்சினைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது, நீண்டகால நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற காரணங்களால் கல்லீரல் பலவீனமடைகிறது. ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.


ஒருசிலருக்கு வயிற்றுப்பகுதியில் திடீரென வீக்கம் தோன்றும். உடல் பருமன், தொப்பை பிரச்சினை காரணமாக அப்படி இருக்கிறது என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிடுவார்கள். வயிற்று பகுதியில் சுரக்கும் ஒருவித திரவம் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் கல்லீரலையும் சேதமடைய செய்துவிடும். அதன்மூலம் கல்லீரல் அழற்சி, கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். ஒருசிலருக்கு கால் பகுதியிலும் வீக்கம் ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

மஞ்சள் காமாலை நோயால் அவதிப்படுபவர்களின் கல்லீரலும் பாதிப்புக்கு உள்ளாகும். அத்துடன் சருமம் மஞ்சள் நிறத்திலும், கண்கள் வெள்ளை நிறத்திலும் காட்சியளித்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை உறுதிப்படுத்திவிடலாம். அடி வயிற்றுக்கு சற்று மேல், வலது பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் அதுவும் கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாகும்.


தொடர்ந்து வயிற்று பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறுவதும், நாளடைவில் அடர் மஞ்சள் நிறமாக தோன்றுவதும், மலச்சிக்கல் பிரச்சினையும் கல்லீரலை பாதிக்கும் விஷயங்களாகும். தொடர்ந்து இந்த பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு உடல் சோர்வும், மன குழப்பமும் உண்டாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker