தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய வேண்டியவை

குழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய வேண்டியவை

தந்தை குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.

குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

என்னென்ன பொறுப்புகளை அப்பாக்கள் செய்யலாம்?


* குழந்தையை குளிப்பாட்டுவது
* தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
* பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
* நாப்கின் மாற்றுவது.
* குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
* குழந்தையுடன் நேரம் செலவழிப்பது

இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும்.

தந்தை செய்ய வேண்டியவை

* குழந்தையுடன் விளையாடுதல்
* நல்லது சொல்லிக் கொடுத்தல்
* குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
* குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
* மரியாதை சொல்லி தருவது
* குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
* மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
* குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
* குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
* குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
* நல்ல தரமான கதைகளை சொல்வது


தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.

உணவுகளைப் பற்றி தந்தை குழந்தையிடம் சொல்ல வேண்டியவை

இதை சாப்பிடகூடாது. அதை சாப்பிடகூடாது எனச் சொல்வதைவிட இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எடுத்து சொல்ல வேண்டும்.

தனக்கு கீரை பிடிக்கவில்லை என்றால் குழந்தைக்கும் அதைச் சொல்லிதர கூடாது. தன் சொந்த கருத்துகளை குழந்தையின் மீது திணிக்க கூடாது.


கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பிடிக்காததை செய்வதோ செய்ய சொல்வதோ கூடாது.

குழந்தை துரித உணவுகளை ஆசைப்பட்டு கேட்டால், உடனே வாங்கி தர கூடாது. இதையெல்லாம் ஏன் சாப்பிட கூடாது என முதலில் சொல்லி பழக்குங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker